IPL 2024: இந்திய டி20 வரலாற்றிலேயே எந்த வீரரும் செய்யாத பிரம்மாண்ட சாதனை படைத்த யுஸ்வேந்திர சாஹல்
டெல்லி : இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக டி20 போட்டிகளில் 350 விக்கெட்களை வீழ்த்தி சரித்திரம் படைத்திருக்கிறார் யுஸ்வேந்திர சாஹல்.
சுழற் பந்துவீச்சாளரான சாஹல் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக வலம் வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடி வரும் அவர் ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்கள் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை சமீபத்தில் செய்து இருந்தார். தற்போது ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் போட்டிகளில் 350 விக்கெட்கள் என்ற மைல் கல் சாதனையை செய்து இருக்கிறார்.

இந்திய அளவில் 350 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை தொட்ட முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் செய்து இருக்கிறார் சாஹல். அவர் டெல்லி கேபிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிக்கு முன் 349 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் 350 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டலாம் என்ற நிலையில் இருந்தார்.
இந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விக்கெட்டை வீழ்த்தினார். அதன் மூலம் அவர் 350 டி20 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அளவில் மிகப்பெரும் சாதனை படைத்திருக்கிறார். இந்திய அளவில் டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா அவர் 310 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
உலகளவில் 350 விக்கெட்களுகும் அதிகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் பதினோராவது இடத்தில் இருக்கிறார் சாஹல். அவர் வீழ்த்திய 350 விக்கெட்களில் 96 விக்கெட்கள் இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் வீழ்த்தியவை. 21 விக்கெட்கள் ஐபிஎல் தொடரில் கிடைத்தவை.
உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் மற்றும் சர்வதேச டி20 போட்டிகள் என ஒட்டுமொத்தமாக 301 போட்டிகளில் விளையாடி 350 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறார் சாஹல். ஓராண்டாக இந்திய அணியில் வாய்ப்பின்றி இருந்த சாஹல் தற்போது இந்திய டி20 அணியில் இடம் பிடித்து இருக்கிறார். 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் பங்கேற்க இருக்கிறார்.
Story first published: Wednesday, May 8, 2024, 8:14 [IST]
Other articles published on May 8, 2024


Click it and Unblock the Notifications