For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025: சிஎஸ்கே அணி இந்த சீசனில் தோல்வியை தழுவியதற்கான 10 காரணங்கள்

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பத்தாவது இடத்தை பிடித்து பிளே ஆப் வாய்ப்பை இழந்த முதல் அணி என்ற பெயரை பெற்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பிளே ஆப் சென்ற அணி என்ற பெயரை பெற்ற சிஎஸ்கே அணி தற்போது எவ்வாறு தொடர்ந்து இரண்டு முறை பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்த அணி என்ற பெயரை பெற்றிருக்கிறது.

இதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவ முக்கிய காரணம் பேட்டிங் வரிசை தான். ருதுராஜ் தொடக்க வீரராக களமிறங்கிய போது, சிஎஸ்கே அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. ருதுராஜ் மற்றும் கான்வே அல்லது ருதுராஜ் மற்றும் டுபிளசிஸ் என சிஎஸ்கே அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்கும்.

CSK

ஆனால் இம்முறை ருதுராஜ் நம்பர் மூன்றாவது வீரராக களமிறங்கினார். இதனால் சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவிந்திரா, ராகுல் திருப்பாதி ஆகியோரை தொடக்க வீரராக களம் இறக்கியது. இதில் இரண்டு பேருமே சரியாக செயல்படவில்லை. இதனால் ருதுராஜ்க்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. ரசிகர்கள் பலரும் ருதுராஜ்க்கு தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில் அதனை சிஎஸ்கே அணி நிர்வாகம் காதில் கூட வாங்கவில்லை.

இதுவே சிஎஸ்கே அணி ஆரம்ப கட்டத்தில் தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதில் பலரும் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் இடத்தை பிடிப்பதற்காக தான் இவ்வாறு களம் இறங்கினார் என்று புகார் கூறினார். சிஎஸ்கே அணியின் தோல்விக்கு இரண்டாவது காரணம் ருதுராஜ் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.

ருதுராஜ் சிஎஸ்கே அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். சிஎஸ்கே அணி அதிக ரன்கள் எடுக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் ருதுராஜாக தான் இருப்பார். இந்த நிலையில் முக்கிய பேட்ஸ்மேன் ஒருவர் காயம் காரணமாக வெளியேறி இருந்தது சிஎஸ்கே அணிக்கு பெரும் சொதப்பலை ஏற்படுத்தியது. சிஎஸ்கே அணியின் தோல்விக்கு மூன்றாவது காரணம் ரச்சின் ரவீந்திரா தான். மற்ற அணி வீரர்கள் எல்லாம் அதிரடியை காட்டிய நிலையில் ரச்சின் ரவீந்திரா தொடர்ந்து தடுமாறினார்.

ஒருநாள் டெஸ்ட் போட்டிகளில் உலகின் முன்னணி வீரராக விளங்கி வரும் ரச்சின், தொடர்ந்து இரண்டு சீசன்களாக ஐபிஎல் தொடரில் தடுமாறி வருகிறார். அவர் மட்டும் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தால், நிச்சயம் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று இருக்கலாம். சிஎஸ்கே அணியின் தோல்விக்கு நான்காவது காரணம் ராகுல் திருப்பாதி தான். ராகுல் திருப்பாதி ஐபிஎல் தொடருக்கு வந்த போது அதிரடியாக ஆடி ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

இந்த நிலையில் ராகுல் திருப்பாதிக்கு 34 வயதாகிறது. அவர் சிஎஸ்கே அணிக்கு நன்றாக விளையாடுவார் என்ற நம்பி தான் அவரை ஏலத்தில் எடுத்தார்கள். ஆனால் ராகுல் திருப்பாதி ஒரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை ஏமாற்றினார். சிஎஸ்கே வின் தோல்விக்கு ஐந்தாவது காரணம் தீபக் ஹூடா தான். ஒரு காலத்தில் அபாரமாக சதம் விளாசி, தீபக் ஹூடா சாதித்து இருந்தால் இந்திய டி20 அணியில் முக்கிய இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென்று அணியை விட்டு நீக்கப்பட்டு இடம் தெரியாமல் ஹூடா காணாமல் போனார். இந்த தருணத்தில் சிஎஸ்கே அணியில் இடம் பிடித்து மீண்டும் தீபக் ஹூடா சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஏமாற்றத்தை கொடுத்தார். சிஎஸ்கே அணி தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தும், அவர் பெரிய அளவு சாதிக்கவில்லை. சிஎஸ்கே அணியின் தோல்விக்கு ஆறாவது காரணம் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தன்னுடைய பந்துவீச்சு பார்வை வெளிக்கொண்டுவர முடியாமல் தவித்தது தான்.

ஒரு காலத்தில் அஸ்வின் பவர் பிளேவின் அபாரமாக செயல்பட்டு எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவார். அதனை நம்பி தான் சிஎஸ்கே தொடர்ந்து அவரை பவர் பிளேவில் விளையாட வாய்ப்பு கொடுத்தது. ஆனால் அவர் தனது ஓவரில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தார். மேலும் அஸ்வின் பேட்டிங்கிலும் டிஎன்பிஎல் தொடரில் எல்லாம் அபாரமாக விளையாடினார். ஆனால் அதே போல் ஒரு ஆட்டத்தை ஐபிஎல் தொடரிலும் காட்ட முடியாமல் தவித்தார். இதனால் அஸ்வின் பிளேயிங் லெவனில் இருந்து தன்னுடைய இடத்தை இழந்தார்.

சிஎஸ்கே அணியின் தோல்விக்கு ஏழாவது காரணம் பதிரானா தான். சிஎஸ்கே 2023 ஆம் ஆண்டு சாம்பியன் தொடரை வென்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் பதிராணா தான். பதிராணா தன்னுடைய அபாரமான ஸ்டைலான பந்துவீச்சால் குட்டி மலிங்கா என்று பெயர் எடுத்தார். யாக்கர்களை வீசி சிஎஸ்கே அணிக்கு முக்கிய விக்கெட்டுகளை பதிராணா எடுத்துக் கொடுப்பார்.

பதிராணா பந்து வீசுகிறார் என்றால் எதிரணி வீரர்கள் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறினார்கள். ஆனால் பதிரானா அடிக்கடி காயம் ஏற்பட்டதால் தற்போது அவருடைய பந்து வீச்சு ஸ்டைலும் கொஞ்சம் மாற்றி இருந்தார். இதனால் அவரால் பழையபடி பந்து வீச முடியவில்லை. மேலும் பதிரானா முக்கிய கட்டத்தில் அதிக அளவு ரன்களை விட்டுக் கொடுத்தார். நடப்பு சீசனில் அதிக ஓயிடு பந்துகளை வீசிய வீரர் என்ற சோகமான சாதனையையும் பதிராணா தான் படைத்திருந்தார்.

இதனால் சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியது சிஎஸ்கே அணியின் தோல்விக்கு எட்டாவது காரணம் ஜடேஜாவும் சிவம் துபேவும் தான். சிஎஸ்கே அணியின் பேட்டிங்கில் இரு தூண்களாக விளங்க வேண்டிய இருவரும் பெரியளவு இந்த தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சிவம் துபே கூட ஒரு இரு ஆட்டங்களில் ரன்களை சேர்த்தாலும் ஜடேஜா பெருமளவு தடுமாறினார். கீழ் வரிசையில் ஜடேஜா பெரியளவு ரன்களை சேர்க்கவில்லை என்று தான் அவருக்கு பேட்டிங் வரிசையில் ப்ரொமோஷன் கொடுக்கப்பட்டது..

ஆனால் ஜடேஜா சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. ஜடேஜா பழைய மாதிரி பேட்டிங்கில் ஆட முடியாமல் தவிப்பதும், பந்துவீச்சில் பெரிய அளவு விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் தவிப்பது சிஎஸ்கே வின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. சிஎஸ்கே வின் தோல்விக்கு ஒன்பதாவது காரணம் தோனி தான். தோனிக்கு வயது மூப்பு காரணமாக காலில் காயம் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக அவரால் தொடர்ந்து பதினைந்து பத்து ஓவர்கள் பேட்டிங் செய்ய முடியவில்லை.

இதனால் சில போட்டிகளில் தோனி கீழ் வரிசையில் களம் இறங்கினார். எனினும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்ற போது எல்லாம் முக்கிய கட்டத்தில் தோனி அவுட் ஆனார். இதுவும் சிஎஸ்கேவுக்கு பிரச்சனை ஏற்படுத்தியது. சிஎஸ்கே அணி தோல்விக்கு பத்தாவது காரணம் பில்டிங் தான். சிஎஸ்கே அணி இந்த தொடரில் கேட்ச்களை பெரிய அளவு தவறவிட்டது.

கைக்கு வரும் கேட்ச்களை கூட சிஎஸ்கே கோட்டை விட்டதால்,ஆரம்ப கட்டத்தில் பல போட்டிகளில் தோல்வியை தழுவ அதுவே முக்கிய காரணமாக மாறியது. இதனால் சிஎஸ்கே அணி தங்களுடைய பில்டிங்கை கவனம் செலுத்த வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த குறைகள் எல்லாம் சிஎஸ்கே அணி சரி செய்ய வேண்டும் மேலும் பேட்டிங்கில் மற்ற அணி வீரர்கள் போல் அதிரடி காட்ட முயற்சி செய்ய வேண்டும் .

Story first published: Thursday, May 1, 2025, 21:05 [IST]
Other articles published on May 1, 2025
English summary
IPL 2025- 10 Reasons for Why CSK Knocked out very Early in the tournament
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+