Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 : 10 அணிகளின் கேப்டன்கள் யார்? 5 அணிகளுக்கு புதிய கேப்டன்கள்- முழு விவரம்

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் தற்போது நடந்து முடிவடைந்து இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்கு முன்பு 5 அணிகள் புதிய கேப்டன்களை தேடும் பணியில் ஈடுபட்டது. தற்போது மெகா ஏலத்தில் பல வீரர்கள் வாங்கி குவித்தன் மூலம் ஐந்து அணிகளும் புதிய கேப்டனை தேர்வு செய்திருக்கிறது.

இந்த சூழலில் நடப்பு சீசனில் 10 அணிகளின் கேப்டன்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி தங்களுடைய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் விடுவித்தது. இதன் காரணமாக புதிய கேப்டனை நியமிக்கும் பணியில் கேகேஆர் அணி இருக்கிறது.

ipl auction 2025 kl rahul ipl

கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக ரஹானே செயல்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. ரகானே இல்லை என்றால் அவருக்கு அடுத்ததாக வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை வந்த சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் தொடர்வார்.

இதேபோன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் எப்போதும் போல் கேப்டனாக செயல்படுவார். ஆர் சி பி அணியில் பழைய கேப்டனாக இருந்த டுப்ளிசிஸ் வேறு அணிக்கு சென்று விட்டதால் தற்போது விராட் கோலி புதிய கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த சீசனிலே ருதுராஜ் கேப்டனாக நியமித்ததால் அவர் நான் நடப்பு சீசனிலும் தொடர்வார்.

டெல்லி அணியை பொருத்தவரை ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட்டார். தற்போது ரிஷப் பண்ட் சென்று விட்டதால் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ள கே எல் ராகுல் தற்போது கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் விடுவிக்கப்பட்டதால் அவருக்கு பதில் 27 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் கேப்டன் ஆக இருப்பார்.

குஜராத் அணியை பொறுத்தவரை கடந்த சீசனில் கில்லை தான் கேப்டனாக நியமித்தது.அவர்தான் தற்போது தொடர்வார் என தெரிகிறது. பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியும் தற்போது புதிய கேப்டனை தேடும் பணியில் இருக்கின்றது. ஸ்ரேயாஸ் 26 கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பதால் அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் மீண்டும் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்டியா தான் தொடர்வார் என தெரிகிறது.

Story first published: Thursday, November 28, 2024, 13:08 [IST]
Other articles published on Nov 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+