Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: 35 பந்துகளில் சதம்.. 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை.. நடுங்கி போன குஜராத்

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் இல் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் விளாசி உலக சாதனை படைத்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் கெயிலுக்கு பிறகு அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் இவருக்கு சேர்ந்தது. முன்னதாக 17 பந்துகளில் அரை சதம் விளாசி இருந்ததும் உலக சாதனையாக கருதப்பட்டது. . இதன் மூலம் டி20 போட்டிகளில் அரை சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை சூரியவன் சி படைத்திருக்கிறார்.

குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டம் ராஜஸ்தான் அணிக்கு வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இருக்கின்றது. இனி எஞ்சியிருக்கும் 5 போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்று வாய்ப்பு இருக்கும். அதற்கும் மற்ற அணிகளின் தயவு கொஞ்சம் தேவைப்படும்.

Vaibhav Suryavanshi

இந்த சூழலில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது இதில் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் கில் 50 பந்துகளில் 84 ரன்கள் ஜாஸ் பட்லர் 26 பந்துகளில் அரை சதமும் அடித்தனர். இதனை அடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணியின் இளம்படை விளையாடியது.

இதில் 14 வயது வீரரான சூரியவன்ஷி நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வாலும் இணைந்து குஜராத் அணியின் பந்துவீச்சை சுக்குநூறாக உடைத்தனர். குறிப்பாக 14 வயது வீரரான சூரியவன்சி தன்னுடைய ருத்ரதாண்டவத்தை இன்று ஆடினார். ஐபிஎல் தொடரில் எப்படி 14 வயது இடம் பிடித்தார் என்ற கேள்விக்கு தன்னுடைய பேட்டிங் மூலம் இன்று நிரூபித்தார். ஏதோ 20 ரன்கள் 30 ரன்கள் வேகமாக அடித்து சொல்லும் வீரர் தாம் கிடையாது என்பதை வைபவம் சூரியவன்ஷி தன்னுடைய 14 வயதிலே நிரூபித்திருக்கிறார்.

அதுவும் முஹம்மது சிராஜ், இஷாந்த் ஷர்மா, பிரசித் கிருஷ்ணா, ரசீத்கான், வாஷிங்டன் சுந்தர் போன்ற சர்வதேச பந்துவீச்சு படையைக் கொண்ட குஜராத் பவுலர்களை சூரியவன்சி பதம் பார்த்தார். தொடர்ந்து அவர் சிக்ஸர், பவுண்டரி என அடிக்க குஜராத் அணி செய்வது அறியாமல் திகைத்துப் போய் நின்றார்கள். இதில் சூரியவன்சி 17 பந்துகளில் அரை சதம் விளாசி சாதனை படைத்தார்.

இதில் மூன்று பவுண்டரிகளும், ஆறு இமாலய சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் டி20 கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அரை சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை சூரியவன்சி படைத்திருக்கிறார். மேலும் அதிவேகமாக ஐபிஎல் தொடரில் அரை சதம் விளாசிய 14 வது வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் 13 பந்துகளில் ஜெய்ஸ்வால் கடந்த 2023 ஆம் ஆண்டு அரை சதம் அடித்தது தற்போது வரை சாதனையாக தொடர்கிறது. 14 வயதில் ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகத்தையும் வைபவ் சூர்யவன்சி தன்னுடைய அதிரடி பேட்டிங் மூலம் கலக்கி இருக்கிறார்.

தொடர்ந்து ஆக்கோரஷமாக ஆடிய அவர், ஒவேரில் 30 ரன்கள் அடித்தார். இதன் மூலம் 35 பந்துகளில் சதம் விளாசினார். ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 2வது அதிவேக சதம் இதுவாகும். டி20 வரலாற்றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையும் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இறுதியில் 38 பந்தில் 101 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரியும், 11 சிக்சர்கள் அடங்கும்.

Story first published: Monday, April 28, 2025, 22:33 [IST]
Other articles published on Apr 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+