Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- உயிரே போனாலும், இந்த 5 பவுலர்களை மட்டும் எந்த அணியும் விடுவிக்காது!

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக ஆறு வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி அளித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளில் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்றால் பவுலர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும்.

பேட்ஸ்மேன்கள் கபடி ஆடும் ஐபிஎல் தொடரில் பவுலர்கள் அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்கள். இதனால் எந்த அணியின் பௌலிங் நன்றாக இருக்கிறதோ, அந்த அணியை சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

ipl 2025 csk ms dhoni 2025


இந்த சூழலில் வரும் ஏலத்தில் ஐந்து பவுலர்களை எவ்வளவு கோடி கொடுத்தாலும் அணிகள் விடுவிக் காது. அவர்கள் யார் என்று தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் பும்ரா, மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் அவர், உலகின் மிகச்சிறந்த டி20 பௌலராக இருக்கின்றார். மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியைப் பெற முடியாமல் தவித்தாலும் பும்ரா பந்துவீச்சில் பட்டையை கிளப்புகின்றார்.

டி20 கிரிக்கெட்டில் ரன்கள் அதிகம் செல்லும் கடைசி கட்ட ஓவர்களில் பும்ரா ஓவருக்கு ஏழு ரன்களை தான் கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் பஞ்சாப் அணியின் ஆர்ஸ்தீப் சிங். இந்தியாவின் இளம் நட்சத்திரமாக விளங்கிவரும் ஆர்ஸ்தீப் டி20 கிரிக்கெட்டில் டெத் பவுலிங் மட்டும் 22 விக்கெட் இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் 29 சதவீதம் டாட் பந்துகளை ஆர்ஸ்தீப் சிங் வீசி இருக்கிறார். இதனால் பஞ்சாப் சிங் அணி ஆர்ஸ்தீப் சிங்கை விடுவிக் காது.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஹர்சல் பட்டேல் இருக்கிறார். கடந்த மூன்று சீசன்களில் மொத்தமாக ஹர்சல் பட்டேல் 37 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.இதனால் ஹர்சல் பட்டேல், பஞ்சாப் அணி ஆர்டிஎம் மூலம் தக்கவைத்துக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் யாஷ் தயால் இருக்கின்றார்.

ஆர்சிபி அணி கடந்த சீசனின் பிளே ஆப் வரைக்கும் வந்ததற்கு அவர் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். இதனால் யாஷ் தயால் ஆர்சிபி அணியில் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் பதிரானா இருக்கின்றார். சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வெல்ல பதிராணா முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். ஒவ்வொரு இன்னிங்ஸிலும் கடைசி ஐந்து ஓவர்களில் பதிராணா வீசி வெறும் ஓவருக்கு எட்டு ரன்களை மட்டுமே வழங்கியிருக்கிறார். இதனால் பதிரானவை சிஎஸ்கே தக்கவைத்துக் கொள்ளப் போகிறது.

Story first published: Wednesday, October 23, 2024, 16:26 [IST]
Other articles published on Oct 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+