Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: ரிஷப் பண்ட் வியூகம்.. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக திட்டம்.. கம்மின்ஸ் தந்த பதிலடி

ஹைதராபாத்: 2025 ஐபிஎல் தொடரின் ஏழாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டது. ஷாபாஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அவேஷ் கான் அணியில் சேர்க்கப்பட்டார். கடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த அதிக ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

IPL 2025 7th match SRH vs LSG Rishabh Pant won toss and opts to bowl against SRH

இந்த நிலையில்தான் ரிஷப் பண்ட் டாஸ் வென்றவுடன் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கிறார். "நாங்கள் அவர்களை விரைவாக ஆட்டமிழக்கச் செய்து விட்டு சேஸிங் செய்ய விரும்புகிறோம். அணியில் யாரை ஆட வைக்கலாம் என்பதை முடிவு செய்யத் தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம்." என்றார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசுகையில், "நாங்கள் எங்களது அதிரடி வியூகத்தை மாற்றப் போவதில்லை. ஒவ்வொரு ஓவரிலும் 10 அல்லது 11 ரன்கள் அடித்தால் சில போட்டிகளில் வெற்றி பெறலாம். நாங்கள் ஒரு அணியாக போட்டிகளை வெல்ல முயற்சிக்கிறோம். ஒரு பந்துவீச்சு குழுவாகவும் வெற்றிகளை பெற விரும்புகிறோம். நிச்சயம் பெரிய ஸ்கோரை எடுப்போம்" என்றார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்): அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), சிமர்ஜீத் சிங், ஹர்ஷல் படேல், முகமது ஷமி.

லக்னோசூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்): ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர் / கேப்டன்), அப்துல் சமத், டேவிட் மில்லர், ஆயுஷ் படோனி, ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், திக்வேஷ் ரதி, பிரின்ஸ் யாதவ்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இம்பாக்ட் வீரர்கள்: ஷாபாஸ், மணிமாறன் சித்தார்த், மிட்செல் மார்ஷ், ஹிம்மத் சிங், ஆகாஷ் மகாராஜ் சிங்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இம்பாக்ட் வீரர்கள்: சச்சின் பேபி, ஜெய்தேவ் உனட்கட், ஜீஷன் அன்சாரி, ஆடம் ஜம்பா, வியான் முல்டர்.

செய்தி சுருக்கம்:

  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • இந்தப் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அவேஷ் கான் சேர்க்கப்பட்டார்.
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெரிய ஸ்கோரை எடுக்கும் என்று கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்தார்.
Story first published: Thursday, March 27, 2025, 19:31 [IST]
Other articles published on Mar 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+