Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- ஒரு அணி தவிர மற்ற 9 அணிகளும் கேப்டன்கள் அறிவிப்பு.. புதிய கேப்டன்கள் யார்?

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் பல மாற்றங்களை சந்தித்து இருக்கிறது. ஒவ்வொரு அணியும் மெகா ஏலத்தில் பல வீரர்களை மாற்றிய நிலையில் சில அணி தங்களுடைய கேப்டன்களையும் மாற்றி உள்ளது. அதன் அடிப்படையில் நடப்பு சாம்பியன் ஆன கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ், பஞ்சாப் அணிக்கு சென்று விட்டார்.

இதனால் அந்த அணிக்கு புதிய கேப்டன் இல்லாமல் இருந்ததால் தற்போது ரகானேவை கேப்டனாக அந்த அணி அறிவித்திருக்கிறது. இதேபோன்று லக்னோ அணியின் கேப்டனாக இருந்த ராகுல், பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த சாம் கரன், ஆர்சிபி அணியின் டுபிளசிஸ், ஆகியோர் வேறு அணிக்கு சென்று விட்டனர்.

IPL 2025 CSK MI RCB 2025 IPL Captains list

இந்த நிலையில் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி அணியை தவிர மற்ற ஒன்பது அணிகளும் தங்களுடைய கேப்டன்களை அறிவித்திருக்கிறார்கள். அது யார் என்று தற்போது பார்க்கலாம். சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் செயல்படுவார். இதேபோன்று ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்த டுபிளசிஸ், டெல்லி அணிக்கு சென்று விட்டதால் தற்போது புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் தொடர்கிறார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்பட இருக்கின்றார். அதேபோன்று லக்னோ அணியின் கேப்டனாக இருந்த ராகுல் வெளியேறிய நிலையில், தற்போது புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டிருக்கிறார்.மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தொடர்கிறார்.

பஞ்சாப் அணியின் கேப்டனாக தற்போது கேகேஆர் அணியிலிருந்து வந்திருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் தொடர்வார் எனும் தெரிகிறது. இதேபோன்று கேகேஆர் அணியின் புதிய கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த சூழலில் டெல்லி அணியில் கேப்டனாக இருந்த பண்ட், வெளியேறிய நிலையில் யாரை கேப்டனாக நியமிப்பது என்ற குழப்பத்தில் நிர்வாகம் உள்ளது.

Story first published: Monday, March 3, 2025, 17:12 [IST]
Other articles published on Mar 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+