Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 வாரத்தில் மாறிய ரெக்கார்ட்.. 28 பந்துகளில் சம்பவம் செய்த அபிஷேக் சர்மா.. காவ்யா மாறன் ஹேப்பி!

ராஜ்கோட்: இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகவேக சதம் விளாசி இளம் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா அசத்தியுள்ளார். இதன் மூலமாக 3 வாரங்களுக்கு முன் 28 பந்துகளில் சதம் விளாசிய குஜராத் வீரர் உர்வில் படேலின் சாதனையை சமன் செய்து அபிஷேக் சர்மா வரலாறு படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் அசத்தலாக செயல்பட்டு ஃபார்முக்கு திரும்பிய அபிஷேக் சர்மா, அந்த ஃபார்மை சையத் முஷ்டாக் அலி தொடரிலும் தொடர்ந்து வருகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மாவுக்கு, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது.

ipl auction 2025 ipl auction abhishek sharma 2025


முதல் டி20 போட்டியில் டக் அவுட்டானாலும், 2வது டி20 போட்டியிலேயே சதம் விளாசி அபிஷேக் சர்மா சாதனை படைத்தார். இதன் மூலமாக ஜெய்ஸ்வாலுக்கு பின் இந்திய டி20 அணியின் மாற்று தொடக்க வீரராக அபிஷேக் சர்மா பார்க்கப்பட்டார். தற்போது அதனை நிரூபிக்கும் வகையில் சையத் முஷ்டாக் அலி தொடரிலும் வேற லெவல் சம்பவத்தை செய்திருக்கிறார்.

மேகாலயா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மேகாலயா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்பின் பஞ்சாப் அணி தரப்பில் கேப்டன் அபிஷேக் சர்மா - ஹர்னூர் சிங் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய பஞ்சாப் அணி 9.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. அதிரடியாக விளையாடிய கேப்டன் அபிஷேக் சர்மா 29 பந்துகளில் 11 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 106 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். 28 பந்துகளில் சதத்தை விளாசியதன் மூலமாக இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதத்தை விளாசிய வீரர் என்ற சாதனையை சமன் செய்துள்ளார்.

3 வாரங்களுக்கு முன் திரிபுரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணிக்காக ஆடிய உர்வில் படேல் 28 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்திருந்தார். தற்போது இந்தப் பட்டியலில் அபிஷேக் சர்மாவும் இணைந்துள்ளார். சையத் முஷ்டாக் அலி தொடரில் அபிஷேக் சர்மா அடிக்கும் 4வது சதம் இதுவாகும். இதன் மூலமாக சையத் முஷ்டாக் அலி தொடரில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இவருக்கு பின் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட மூவரும் தலா 3 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளனர். அபிஷேக் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் காரணமாக ஐதராபாத் அணியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஏனென்றால் ஐதராபாத் அணிக்காக அபிஷேக் சர்மா ரூ.14 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Story first published: Thursday, December 5, 2024, 18:58 [IST]
Other articles published on Dec 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+