Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- அபிஷேக் பேப்பர் கொண்டாட்டம்.. உண்மையை உடைத்த டிராவிஸ் ஹெட்.. பொய் சொல்லி வசமாக சிக்கினார்

ஐதராபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி இளம் வீரர் அபிஷேக் ஷர்மா 55 பந்துகளில் 142 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 246 ரன்கள் என்ற இலக்கை சன்ரைசர்ஸ் அணி 18.3 வது ஓவரிலேயே எட்டி அசத்தியது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் 10வது இடத்திலிருந்து சன்ரைசர்ஸ் அணி தற்போது எட்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

இந்த நிலையில் அபிஷேக் ஷர்மா கடந்த சில போட்டிகளாக பெரிய அளவு சாதிக்கவில்லை. முதல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 24 ரன்கள், லக்னோ அணிக்கு எதிராக 6 ரன்கள், டெல்லி அணிக்கு எதிராக ஒரு ரன், கொல்கத்தா அணிக்கு எதிராக இரண்டு ரன்கள், குஜராத் அணிக்கு எதிராக 18 ரன்கள் என அபிஷேக் ஷர்மா அடித்திருந்தார்.

Travis head on Abhishek

இந்த சூழலில் பஞ்சாப் அணிக்கு எதிராக 141 ரன்கள் வரை குவித்து தன்னுடைய பார்மை அவர் மீட்டு இருக்கிறார். இந்த நிலையில் 40 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தவுடன் அபிஷேக் ஷர்மா தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்தார். அதில் இது எங்கள் அணி ரசிகர்களுக்காக (ஆரஞ்சு ஆர்மி) என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த பேப்பரை இன்று காலை தான் எழுதியதாகவும் ரசிகர்களுக்காக இந்த இன்னிங்ஸை தாம் ஆடியதாகவும் அபிஷேக் ஷர்மா கூறியிருந்தார். இதனை ரசிகர்களும் கொண்டாடி வந்தனர். ஆனால் அபிஷேக் ஷர்மா சொன்னது பொய் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள சக தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா அந்த பேப்பரை கடந்த ஆறு போட்டிகளாக வைத்துக் கொண்டு சுற்றி கொண்டிருக்கிறார்.

இறுதியில் இன்று அவர் அந்த பேப்பரை எடுத்துக் காட்டியது மகிழ்ச்சி என்று கூறி இருக்கிறார். டிராவிஸ் ஹெட்டின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அபிஷேக் ஷர்மா இந்த பேப்பரை இன்று எழுதாமல் கடந்த ஆறு போட்டிகளாக எடுத்து வருகிறார் என்று அவர் கூறியிருக்கிறார்.

எனினும் இதுக்கு விளக்கம் அளித்துள்ள சன்ரைசர்ஸ் ரசிகர்கள், கிண்டல் செய்யும் விதமாக இந்த கருத்தை ஹெட் தெரிவித்து இருக்கலாம் என்றும், அபிசேக வைத்திருந்த பேப்பர் புதியது போல் இருந்ததால் அது இன்று தான் எழுதப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளனர்.

Story first published: Sunday, April 13, 2025, 13:48 [IST]
Other articles published on Apr 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+