மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் கடந்த நவம்பர் மாதம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்றது. இந்த மெகா ஏலம் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அணியின் பெரும்பாலான வீரர்கள் இடம் பெறுவார்கள்.
இந்த சூழலில் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தான். கொல்கத்தா அணி மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது.

இந்த நிலையில் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு எந்த ஐபிஎல் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பது குறித்து ஏஐ தொழில்நுட்பம் இடம் கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு அணியின் பலம் மற்றும் வாய்ப்பு விகிதத்தை வைத்து இனிவரும் சீசன்களின் எந்த அணி கோப்பையை வெல்லும் என தெரிவித்திருக்கிறது.
அதன்படி 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி அணி வெல்லும் என ஏ ஐ குறிப்பிட்டு இருக்கிறது. ஆர்சிபி அணி இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லாத நிலையில் தற்போது ஆர்சிபி வெல்லும் என ஏஐ குறிப்பிட்டிருப்பது ஒட்டுமொத்த விராட் கோலி ரசிகர்களையும் மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.
இதுபோன்று 2026 ஆம் ஆண்டு சீசனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் என்று குறிப்பிட்டுள்ள ஏஐ 2027 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் என குறிப்பிட்டு இருக்கிறது. 2028 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என குறிப்பிட்டுள்ள ஏஐ 2029 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறாவது முறையாக கோப்பையை வெல்லும் என குறிப்பிட்டு இருக்கிறது.
2030 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணி கோப்பையை வெல்லும் என தெரிவித்திருக்கும் ஏஐ, 2031 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி ஏழாவது முறையாகவும் 2032 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐந்தாவது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என குறிப்பிட்டு இருக்கிறது. எனினும் இதனை ரசிகர்கள் புறந்தள்ளி இருக்கிறார்கள்.
காரணம் ஒவ்வொரு அணியின் பலத்தை வைத்து மட்டும் தான் சாம்பியன் பட்டத்தை இந்த அணி வெல்லும் என குறிப்பிட முடியும் என்று சுட்டிக்காட்டி உள்ள ரசிகர்கள் அப்படிப் பார்த்தால் மூன்று ஆண்டுகள் தான் இந்த மெகா ஏலம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் இருப்பார்கள் என குறிப்பிட்டுள்ளது. மேலும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என குறிப்பிட்டதன் மூலம் இது ஒரு காமெடியான கணிப்பு என்றும் ரசிகர்கள் சாடியிருக்கிறார்கள்.