Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 - மெகா ஏலத்தில் எந்த வீரர் அதிக விலைக்கு செல்வார்.. ஆகாஷ் சோப்ரா கணிப்பு

மும்பை : ஐபிஎல் மெகா ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள ஜட்டா நகரில் நடைபெறுகிறது. இந்த மெகா ஏலத்தில் 1574 வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இதில் 1165 இந்திய வீரர்கள் அடங்குவார்கள்.

இந்த சூழலில் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கே எல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் எல்லாம் தங்களுடைய அடிப்படை விலையை இரண்டு கோடி ரூபாயாக நிர்ணயித்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் எந்த வீரர் அதிக விலைக்கு செல்வார் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்திருக்கிறார்.

ipl 2025 ipl auction 2025 csk mi

இது குறித்து தற்போது பார்க்கலாம். ஐபிஎல் மெகா ஏலத்தில் அனைத்து பெரிய வீரர்களும் தங்களுடைய அடிப்படை விலையை இரண்டு கோடி ரூபாயாக நிர்ணயித்து இருக்கிறார்கள்.குறிப்பாக கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் எல்லாம் இந்த பட்டியலில் தான் இடம் பிடித்திருக்கிறார்கள்.

என்னை பொறுத்தவரையில் வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் தான் அதிக விலைக்கு செல்வார் என நினைக்கின்றேன். பண்ட் 25 முதல் 26 கோடி ரூபாய்க்கு செல்வார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெயரை அவர் பெற வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ரிஷப் பண்டை மூன்று அணிகள் தங்களுக்கு வேண்டும் என்று நினைக்கும் பஞ்சாப் அணியிடம் 110 கோடி ரூபாயும், rcb அணியிடம் 83 கோடி ரூபாயும் இருக்கிறது.

இதன் மூலம் இந்த இரு அணிகளும் ரிஷப் பண்டை தங்களுக்கு வேண்டும் என அதிக விலை கொடுக்க தயாராக இருப்பார்கள். இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின், சாகல் ஆகியோரும் அதிக விலைக்கு செல்ல வாய்ப்பு இருக்கின்றது. கே எல் ராகுல் ஒரு கேப்டன் என்பதால் அவரை வாங்கவும் அணிகள் பல கோடியை ஏலத்தில் இறக்குவார்கள்.

இசான் கிஷன் ஏலத்தில் அதிக விலைக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரிஷப் பண்டை பஞ்சாப் அணியும் ஸ்ரேயாஸ் ஐயரை டெல்லி அணியும் கே எல் ராகுலை ஆர்சிபி அணியும் ஏலத்தில் வாங்க முயற்சி செய்யும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, November 7, 2024, 18:02 [IST]
Other articles published on Nov 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+