Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழக பயிற்சியாளரை கிழித்து தொங்க விட்ட ஆகாஷ் சோப்ரா.. ஆணவத்தால் தோற்ற டெல்லி அணி

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி அணி விளையாடிய முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று அபாரமாக இருந்தது. இதனால் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்று சாம்பியன் பட்டம் வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஐபிஎல் தொடரின் பிற்பகுதியில் டெல்லி அணி மோசமாக விளையாடி தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஹேமங் பதானி, டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்தார். ஆனால் அவர் செய்த பல தவறுகளால் தான் டெல்லி அணி தோல்வியைத் தழுவி இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா மறைமுகமாக சாடியிருக்கிறார்.

Delhi capitals

இது குறித்து பேசிய அவர், முதலில் டெல்லி அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் தொடக்க வீரர்களாக யாரை பயன்படுத்துவது என்று அவர்களுக்கு சுத்தமாக ஐடியா இல்லை. முதலில் ஜேக் பிரேசரை வைத்து விளையாடினார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவரை நீக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார்கள். அவர் விளையாடிய வரை அணி வெற்றி பெற்றது.

இந்த சீசனில் மட்டும் ஏழு புதிய தொடக்க ஜோடிகளை டெல்லி அணி பயன்படுத்தியது. டெல்லி அணி பலரையும் விளையாட வைத்தார்கள். ஆனால் எதுவுமே அவர்களுக்கு சரியாக அமையவில்லை. இறுதியில் தான் அவர்களுக்கு உண்மை புரிந்தது. ராகுல் தான் தொடக்க வீரருக்கு சரியான வீரராக இருப்பார். ஆனால் அதற்குள் ஐபிஎல் தொடரே முடிவடைந்து விட்டது. இதேபோன்று டெல்லி அணியின் ஆணவத்தால் தான் அந்த அணி தோல்வியை தழுவியது.

ஹாரி புரூக் ஐபிஎல் தொடருக்கு வர மாட்டார் என்று தெரிந்து நிலையில் அவர்கள் மாற்று வீரர்களை தேர்வு செய்யவே இல்லை. பிரவீஸ் ஏலத்தில் எடுக்கப்படாமல் தான் இருந்தார். அவரை தேர்வு செய்யாமல் எங்களுக்கு ஆட்கள் தேவை இல்லை என்ற ஆணவத்தில் டெல்லி அணி இருந்தது. ஆனால் இறுதியில் நிலைமை மோசமானவுடன் செதுக்குல்லா ஆடல் என்ற வீரரை தேர்வு செய்து விளையாடினார்கள். ஆனால் அது மிகவும் கால தாமதமான முடிவு.

பேட்டிங் ஆர்டரில் என்ன செய்ய வேண்டும் என்று யோசனையே டெல்லி அணிக்கு இல்லை. ஏனென்றால் இருக்கும் அத்தனை டாப் ஆர்டர் வீரர்களையும் அவர்கள் தேர்வு செய்து விட்டார்கள். இதனால் முதல் மூன்று இடத்தில் பலரும் விளையாட வேண்டும் என்று நினைத்தார்கள். அது எப்படி முடியும். அஸ்டோஸ் சர்மா நல்ல பார்மில் இருந்தார். ஆனால் அவரை சரியாக பயன்படுத்தவில்லை. மேலும் நடராஜன் அதிக விலை கொடுத்து வாங்கி அவரை பெரிய அளவு பயன்படுத்தாமல் டெல்லி அணி வைத்திருந்தது என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Story first published: Sunday, June 8, 2025, 11:06 [IST]
Other articles published on Jun 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+