Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2025 தொடரில் விளையாடும் 10 அணிகளின் கேப்டன்கள் யார்? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25 ஆம் தேதி வரை நடைபெறும். மெகா ஏலத்திற்கு பிறகு ஒவ்வொரு அணிகளும் பல மாற்றத்தை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக rcb, டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா, லக்னோ ஆகிய அணிகள் தங்களுடைய கேப்டன்களை மாற்றி இருக்கிறது.

இந்த சூழலில் 10 அணிகளின் கேப்டன் யார் என்பது தற்போது உறுதியாகி இருக்கிறது. அது யார் என்று தற்போது பார்க்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக கடந்த சீசனில் ருதுராஜ் நியமிக்கப்பட்டார்.

IPL 2025 Captains

இந்த நிலையில் மீண்டும் ருதுராஜ் கேப்டனாக செயல்பட போகிறார். டெல்லி அணி தங்களுடைய புதிய கேப்டனாக அக்சர் பட்டேலை நியமித்துள்ளது. பண்ட், லக்னோ அணிக்கு சென்றதால் அக்சர் பட்டேல் கேப்டனாக செயல்பட போகிறார். குஜராத் அணியின் கேப்டனாக கில் செயல்பட போகிறார். இதுபோன்று கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அந்த அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணிக்கு சென்ற நிலையில் ரஹானேவுக்கு கேப்டன் பதவி கிடைத்திருக்கிறது. இதேபோன்று லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே எல் ராகுல் டெல்லி அணிக்கு சென்று விட்டார். இதன் காரணமாக லக்னோ அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டிருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட போகிறார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஷாம்கரன் சிஎஸ்கே அணிக்கு சென்று விட்டதால், தற்போது புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் தொடரப் போகிறார். இதேபோன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் செயல்பட போகிறார்.இந்த நிலையில் rcb அணியின் கேப்டனாக இருந்த டுபிளிசிஸ் வேறு அணிக்கு சென்று விட்டதால் தற்போது புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Story first published: Friday, March 14, 2025, 11:45 [IST]
Other articles published on Mar 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+