IPL 2025 - 6 வீரர்கள் இல்லை, 4 வீரர்களை தான் சிஎஸ்கே தக்க வைக்க போகிறது.. தோனி எடுத்த திடீர் முடிவு
மும்பை : ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்திருக்கிறது. இது பெரிய அணிகளான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் ஆகியோருக்கு நன்மையை பயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பி சி சி ஐ இதற்குப் பின்னால் ஒரு பெரிய டிவிஸ்டை வைத்திருக்கிறது. அதன்படி ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொண்டால், அதில் இரண்டு வீரர்களுக்கு 18 கோடி சம்பளமும், இரண்டு வீரர்களுக்கு 14 கோடி ரூபாய் சம்பளமும் ,ஒரு வீரருக்கு 11 கோடி ரூபாய் சம்பளமும் வழங்கப்பட வேண்டும்.

அது மட்டுமல்லாமல் இந்திய அணிக்கு விளையாடாத வீரராக இருந்தால் அவருக்கு நான்கு கோடி ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். இதனால் சிஎஸ்கே அணி அதிகபட்சமாக ஐந்து வீரர்களை தக்க வைத்துக் கொண்டு ஆர் டி எம் கார்டை பயன்படுத்தி ஒரு வீரரை ஏலத்தில் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
அவ்வாறு செய்தால் மெகா ஏலத்தின் போது சிஎஸ்கே கையில் 52 கோடி இருக்கும். இதை வைத்துக்கொண்டு எஞ்சி உள்ள 15 வீரர்களை வாங்குவது கடினமாகும். இதனால், ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு சிஎஸ்கே ஒரு தைரியமான முடிவை எடுக்கப் போகிறது. அதன்படி மூன்று வீரர்களுக்கு மேல் தக்க வைத்தால் நான்காவது வீரருக்கு 18 கோடி ரூபாயும் மீண்டும் ஐந்தாவது வீரருக்கு 14 கோடி ரூபாயும் கொடுக்க நேரிடும்.
இதன் மூலம் ஏலத்தில் பங்கேற்க போதிய அளவு பணம் இருக்காது. இதனால் சிஎஸ்கே அணி தோனி உட்பட 4 வீரர்கள் மட்டுமே தக்க வைக்க போகிறது. அதன்படி ருதுராஜ்க்கு 18 கோடி, ஜடேஜாவுக்கு 14 கோடி,இலங்கை வீரர் பதிரானாவுக்கு 11 கோடி ரூபாயும், தோனிக்கு 4 கோடி ரூபாயும் சிஎஸ்கே கொடுக்கப் போகிறது. இதன் மூலம் சிஎஸ்கே வெறும் 47 கோடி ரூபாயை செலவு செய்து விட்டு கைவசம் 73 கோடி உடன் ஏலத்தில் பங்கேற்க இருக்கிறது.
இதன் மூலம் சிஎஸ்கே அணியிடம் இரண்டு ரைட்டு மேட்ச் கார்டு கைவசம் இருக்கும். அதை வைத்துக்கொண்டு கான்வே மற்றும் சிவம் துபேவை சிஎஸ்கே அணி வாங்கிக் கொள்ளலாம். அனைத்து அணிகளுமே பெரிய அளவில் பணம் இருக்காது என்பதால் கான்வே மற்றும் சிவம் துபேவை 10 கோடி ரூபாய்க்கு மேல் எந்த அணியும் செலவழித்து வாங்க முடியாது. இதனால் ரைட் டூ மேட்ச் கார்டை பயன்படுத்தி குறைந்த விலையில் வீரர்களை வாங்கிக் கொள்ள முடியும்.
இதுவே ஏலத்திற்கு முன்பே தக்க வைத்துக் கொண்டால் கான்வேக்க் 18 கோடி ரூபாயும், சிவம் துபேவுக்கு 14 கோடி ரூபாயும் கொடுக்க வேண்டும். ஆனால் ஏலத்தில் இந்த இரண்டு வீரர்களுமே இவ்வளவு பெரிய விலைக்கு போக மாட்டார்கள் என்பதால் சிஎஸ்கே இருவரையும் விடுவிக்க முடிவு செய்திருக்கிறது. இதனால் 3 பிளஸ் 1uncapped வீரர் என்ற ஃபார்முலாவை பயன்படுத்தி மெகா ஏலத்தில் சென்னை அணி களம் இறங்கப் போகிறது. இதனால் கைவசம் இருக்கும் 73 கோடி வைத்து எஞ்சி உள்ள வீரர்களை வாங்கிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications