For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL Retention 2025 -மெகா ஏலம், வீரர்களை தக்க வைக்கும் புதிய விதி தொடர்பாக, அனைத்து கேள்விக்கும் பதில்

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். எத்தனை வீரர்களை ஆர் டி எம் மூலம் தேர்வு செய்து கொள்ளலாம் என்ற விதி குறித்து அண்மையில் மிகப்பெரிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் ஒவ்வொரு அணியும் தங்களுடைய குறை நிறைகளை கூறினார்கள். இதற்கு எல்லாம் தகுந்தார் போல் பிசிசிஐ ஒரு சிறப்பான மாற்றங்களை அறிவித்திருக்கிறது. அதன்படி ஐபிஎல் வீரர்களை தக்க வைக்கும் முறையில் என்ன மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதில் உங்களின் சந்தேகங்களுக்கான பதில் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

ipl 2025 ipl retention ms dhoni csk 2025

ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை ஏலத்திற்கு முன்பு தக்க வைத்துக் கொள்ளலாம் ?

ஒவ்வொரு அணியும் ஏலத்திற்கு முன்பு ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். இந்த ஆறு வீரர்கள் ஐந்து வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடும் வீரராகவும் இருக்கலாம் அல்லது 5 வெளிநாட்டு வீரர்களாகவும் இருக்கலாம். இதே போல் இரண்டு இந்திய அணிக்காக விளையாட வீரர்களும் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் எப்படி தேர்வு செய்தாலும் ஆறு வீரர்களை தாண்டக்கூடாது.

இந்திய அணிக்காக விளையாடாத வீரர் என்றால் அதன் விதி என்ன? தோனி புதிய விதிக்குள் வருவாரா ?

2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பு வரை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன இந்திய வீரரை இந்திய அணிக்காக விளையாடாதவர் என்று கருதப்படும் முறை இருந்தது. ஆனால் அது 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு நீக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்த விதியை மீண்டும் கொண்டுவர சிஎஸ்கே கூறியது. அதன் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளாக இந்திய அணிக்கு எந்த ஒரு சர்வதேச போட்டியும் விளையாடாத வீரரை, uncapped வீரர் என்று கருதலாம் என்று பிசிசி அறிவித்துள்ளது. அதன்படி தோனி கடைசியாக 2019 உலகக்கோப்பைகள் தான் விளையாடினார் என்பதால் அவர் uncapped வீரராக கருதப்படுவார்.

இதேபோன்று வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்பு இந்திய அணிக்காக விளையாடுகிற வீரர்கள் capped வீரராக கருதப்படுவார்கள். அதன் பிறகு அறிமுகமானால் அவர்களும் uncapped வீரராக கருதப்படுவார்கள்.

தக்கவைக்கப்படும் வீரர்களின் சம்பளம் எவ்வளவு? Uncapped சம்பளம் எவ்வளவு ஐபிஎல் அணிகள் எவ்வளவு பணம் மெகா ஏலத்தை செலவு செய்யலாம்?

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 120 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம். இது கடந்த ஏலத்தை விட 20 கோடி ரூபாய் அதிகமாகும். முதலாவதாக தக்க வைக்கும் வீரருக்கு 18 கோடி ரூபாய் சம்பளம், இரண்டாவதாக தக்கவைக்கப்படும் வீரருக்கு 14 கோடி ரூபாய் சம்பளம், மூன்றாவதாக தக்கவைக்கப்படும் வீரருக்கு 11 கோடி ரூபாய் சம்பளம்.

இதேபோன்று நான்காவது தக்கவைக்கப்படும் வீரருக்கு 18 கோடி ரூபாய் சம்பளம். ஐந்தாவது வீரராக தக்க வைக்கப்படும் வீரருக்கு 14 கோடி ரூபாய் சம்பளம். இது மட்டுமில்லாமல் uncapped வீரருக்கு வழங்கப்படும் சம்பளம் 4 கோடி ரூபாய். இதன் மூலம் ஒரு அணி ஐந்து சர்வதேச வீரர்களையும் மற்றும் ஒரு இந்திய அணிக்காக விளையாடாத வீரரை தக்க வைத்து கொண்டால் ஏலத்திற்கு முன்பு 79 கோடி ரூபாயை அவர்கள் செலவு செய்து விடுவார்கள்.

இதன் மூலம் வெறும் 41 கோடி ரூபாய் மட்டுமே அந்த அணியின் கைவசம் இருக்கும். இதேபோன்று ஏலத்திற்கு முன்பு நான்கு சர்வதேச வீரர்களையும் இரண்டு இந்திய அணிக்காக விளையாடாத வீரர்களையும் தேர்வு செய்தால் அந்த அணி 69 கோடி ரூபாயை செலவு செய்து விடும். இதன் மூலம் 51 கோடி ரூபாய் கைவசம் இருக்கும்.

ஆர்டிஎம் கார்டு என்றால் என்ன? மொத்தம் எத்தனை கார்டுகள் இந்த மெகா ஏலத்தில் பயன்படுத்தலாம்? இதில் புதிய மாற்றம் ஏதேனும் வந்திருக்கிறதா ?

ஆர்டிஎம் கார்ட் என்றால் ரைட் டூ மேட்ச் கார்டு அதாவது தங்கள் அணிக்கு விளையாடிய வீரர்களை மீண்டும் ஏலத்தில் எடுக்கும் முறைதான். இப்போது ஒரு அணி ஐந்து வீரர்களை தக்க வைத்துக் கொண்டால், அந்த அணிக்கு ஒரு ஆர்டிஎம் கார்டு வழங்கப்படும்.

இல்லை ஒரு அணி நான்கு வீரர்களை மட்டும் தான் தக்க வைத்துக் கொண்டால் அவர்கள் இரண்டு rtm கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லை ஒரு அணி அதிகபட்சமாக ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொண்டால் அவர்களுக்கு ஆர்டிஎம் கார்டு கிடைக்காது.

புதிய ஆர்டிஎம் விதிப்படி எடுத்துக்காட்டாக ஆர்சிபி அணி சிவம் துபேவை 10 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்க முயற்சி செய்கிறது என்று வைத்துக் கொள்வோம் அப்போது சிஎஸ்கே அணி ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி துபேவை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று கூறுவார்கள்.

தற்போது புதிய விதிப்படி மீண்டும் ஆர்சிபி அணியிடம் நீங்கள் சிவம் துபேவை அதிக விலை கொடுத்து வாங்குவீர்களா என்று மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும். அப்போது அவர்கள் ஆம் என்று கூறி ஒரு விலையை கூறினால் அதே விலையை சிஎஸ்கே கொடுத்து சிவம் துபே மீண்டும் வாங்கிக் கொள்ளலாம்.

Match fee என்றால் என்ன? இது எதற்காக வழங்கப்படுகிறது?

பொதுவாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஒரு தொகையை கொடுத்து ஒப்பந்தம் செய்து கொள்ளும். அதன் பிறகு ஒவ்வொரு போட்டிக்கும் தனியாக சம்பளம் வழங்கப்படும். ஆனால் ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு ஒப்பந்தம் மட்டும் தான் வழங்கப்படுகிறது. தனியாக சம்பளம் வழங்கப்படவில்லை.

மேலும் ஒரு வீரர் 20 லட்சம் ரூபாய்க்கு தேர்வு செய்யப்பட்டு விட்டால் அடுத்த மூன்று ஆண்டுகள் அதே தொகையில் தான் வீரர்கள் பெறுவார்கள். இதனை கருத்தில் கொண்டு இனி ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் வீரருக்கு தனியாக ஏழரை லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி ஒரு சீசனிலும், ஒரு வீரர் அனைத்துப் போட்டிகளையும் விளையாடி விட்டால் அவருக்கு கூடுதலாக ஒரு கோடி ரூபாய் சம்பளமாக கிடைக்கும். இது இளம் வீரர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

Story first published: Sunday, September 29, 2024, 14:30 [IST]
Other articles published on Sep 29, 2024
English summary
IPL 2025 auction retention rules Full details in Tamil Explained - With FAQ IPL Retention 2025 -மெகா ஏலம், வீரர்களை தக்க வைக்கும் புதிய விதி தொடர்பாக, அனைத்து கேள்விக்கும் பதில்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+