Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியால் ஒரே நேரத்தில் டி20,ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியை விளையாட முடியும்-ஸ்டார்க் பாராட்டு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியால் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்தில் டி20 ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை விளையாட முடியும் என ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பாராட்டியுள்ளார்.

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 ஐசிசி உலக கோப்பையை அடுத்தடுத்து வென்று இருக்கிறது.இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் இந்திய அணி மீது கடும் விமர்சனங்களை வைத்து வரும் நிலையில், பல வெளிநாட்டு வீரர்கள் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Mitchell starc

அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வெற்றி ஸ்டார்க் பேசுகையில் என்னை பொருத்தவரை இந்த உலகத்தில் இந்திய அணியால் மட்டும் தான் ஒரே நேரத்தில் டெஸ்ட் போட்டி, ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டி என மூன்று அணிகளை தேர்வு செய்து ஒரே நாளில் விளையாட வைக்க முடியும்.இந்தியா நினைத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட், இங்கிலாந்துக்கு எதிராக ஒரு நாள் மற்றும் தென்னாபிரிக்காவுக்கு எதிராக t20 என மூன்று போட்டிகளையும் ஒரே நேரத்தில் நடத்த முடியும்.

அந்த மூன்றுமே இந்திய அணி எதிரணிக்கு கடும் சவால்களை கொடுக்கும் என் இதை வேறு எந்த நாட்டாலும் செய்ய முடியாது. ஐபிஎல் தொடர் இந்தியாவுக்கு சாதகமா என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் மட்டும் தான் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் நாங்கள் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் நடத்தப்படும் டி20 தொடரில் விளையாடுகிறோம்.

ஆனால் ஐபிஎல் தொடர் தான் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும். ஏனென்றால் இந்திய வீரர்கள் அனைவரும் விளையாடுகிறார்கள். மேலும் பல சர்வதேச வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்கிறார்கள். இது மிகப் பெரிய தொடர் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஆனால் இந்திய வீரர்கள் வெறும் ஐபிஎல் தொடரில் மட்டும் தான் விளையாடுகிறார்கள்.

பல வெளிநாட்டு வீரர்கள் 5 முதல் 6 வெளிநாட்டு தொடரில் விளையாடுகிறார்கள். இதன் மூலம் அந்த வெளிநாட்டு வீரர்களுக்கு உலக கிரிக்கெட் தொடர்பான மிகப்பெரிய அனுபவம் கிடைக்கும். ஐபிஎல் தொடர் மூலம் இந்திய அணியில் பல வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியில் பல பேர் வாய்ப்புக்காக தற்போது காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் ஸ்டார்க் டெல்லி அணியால் 11 கோடியை 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறார்.

Story first published: Thursday, March 13, 2025, 21:08 [IST]
Other articles published on Mar 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+