Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: வைபவ் பார்த்து காப்பி அடிக்க தேவையில்லை.. 17 வயது வீரர் ஆயுஷ் மாத்ரேவின் தந்தை அட்வைஸ்

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷியை போல் சிஎஸ்கே அணியில் இடம் பிடித்திருக்கக்கூடிய 17 வயது வீரரான ஆயுஷ் மாத்ரேவும் அபாரமாக விளையாடி வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆயுஸ் மாத்ரே 48 பந்துகளில் 94 ரன்கள் குவித்து அசத்தினார்.

எனினும் 14 வயது வீரரான வைபவ் 35 பந்துகளில் சதம் அடித்திருந்தார். எனினும் அந்த இன்னிங்ஸ்க்கு பிறகு தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வைபவ் பெரிய ரன்கள் எதுவும் குவிக்கவில்லை. ஆனால் ஆயுஷ் மாத்ரே அதிரடியையும் நிதானத்தையும் கலந்த மாதிரி விளையாடுகின்றார்.

Ayush Mhatre

இந்த நிலையில் ஆயுஷ் மாத்ரேவின் தந்தை யோகேஷ் மாத்ரே அளித்துள்ள பேட்டியில், எனது மகனும் வைபவும் முற்றிலும் இரண்டு வித்தியாசமான பேட்ஸ்மேன்கள் ஆவார்கள். எனவே வைபவுடன் ஆயுஷ் மாத்ரேவை ஒப்பிட்டுப் பேசுபவர்கள். இதனை முதலில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதை போன்று நான் என் மகனிடம் வைபவை பார்த்து காப்பி அடிக்காதே. அவரைப் போல நீயும் அதிரடியாக விளையாடி சதம் அடிக்காதே என்று கூறியிருக்கின்றேன் ஏனென்றால் ஆயூஷ்க்கு அப்படி எந்த ஒரு தேவையும் இல்லை. அதிரடியாக ஆடி சதம் அடிக்க வேண்டும் என்று நினைத்தால் அது தேவையில்லாத அழுத்தத்தை தான் அவருக்கு கொண்டு வந்து சேர்க்கும்.

மேலும் கிரிக்கெட்டில் பல தூரம் ஆயுஷ் மாத்ரே பயணிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார். ஆர் சி பி அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு தோனி ஆயுஷ் உடன் பேசி இருக்கிறார். அப்போது சிறப்பாக விளையாடியிருக்கிறாய். இதே போல் பல சிறப்பான ஆட்டங்களை நீ எதிர்காலத்தில் விளையாட வேண்டும் என்று தோனி என் மகனை பாராட்டி இருக்கின்றார்.

தோனி மீது மிகப்பெரிய மரியாதையை எனது மகன் வைத்திருக்கிறார். இதனால் தோனியின் இந்த வார்த்தை அவருக்கு மிகப்பெரியதாகும். தோனி போன்ற ஒரு நபர் என் மகன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்றால் அதைவிட பெரிய விஷயம் வேறு எதுவும் இல்லை என்று ஆயுஷ் மாத்ரேவின் தந்தை யோகேஷ் மாத்ரே தெரிவித்திருக்கின்றார்.

Story first published: Monday, May 5, 2025, 18:40 [IST]
Other articles published on May 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+