Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: அடிப்படை விலையில் நடந்த மாற்றம்.. ஊதியத்தை உயர்த்திய பிசிசிஐ.. இந்த விதியை கவனிச்சீங்களா?

மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தொடர்புடைய விதிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ள நிலையில், உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான அடிப்படை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இம்முறை சர்வதேச வீரர்களுக்கான அடிப்படை ஏலத் தொகையாக ரூ.75 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நவம்பர் 30ஆம் தேதி சவுதி அரேபியாவில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. ஐசிசி தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்பதற்கு முன்பாகவே ஐபிஎல் மெகா ஏலத்தை எந்த சிக்கலும் இல்லாமல் நடத்திய பிசிசிஐ நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. இதனால் ஒவ்வொரு அணியும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அக்.31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று கெடு வைக்கப்பட்டுள்ளது.

ipl 2025 chennai super kings ms dhoni 2025

இதன் காரணமாக 3 நாட்களுக்கு முன்பாக மெகா ஏலம் தொடர்பான விதிமுறைகள் மற்றும் ரிடென்ஷன் பாலிசியை பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எந்த வீரரையும் தக்க வைக்க விரும்பவில்லை என்றால், மெகா ஏலத்தில் 6 ஆர்டிஎம் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தக்க வைக்கப்படும் வீரர்களுக்கான ஊதியமாக ரூ.18 கோடி, ரூ.14 கோடி மற்றும் ரூ.11 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடைசி 2 ரிடென்ஷனுக்கு ரூ.18 கோடி மற்றும் ரூ.14 கோடியே ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த அணியும் முழுமையாக ரிடென்ஷனை பயன்படுத்த மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இம்முறை ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு போட்டி ஊதியமாக ரூ.7.5 லட்சம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு கூட இவ்வளவு பெரிய தொகை போட்டி ஊதியமாக அளிக்கப்படுவதில்லை. இது ரசிகர்கள் மட்டுமல்லாமல் வீரர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனிடையே பிசிசிஐ தரப்பில் மற்றொரு முக்கியமான மாற்றமும் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த மெகா ஏலத்தில் உள்ளூர் வீரர்களுக்கான அடிப்படை விலையாக ரூ.20 லட்சம், ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதேபோல் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான அடிப்படை விலையாக ரூ.50 லட்சம், ரூ.75 லட்சம், ரூ.1 கோடி, ரூ.1.5 கோடி மற்றும் ரூ.2 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால் நடக்கவுள்ள மெகா ஏலத்தில் உள்ளூர் வீரர்களுக்கான அடிப்படை விலையாக ரூ.30 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.30 லட்சம், ரூ.40 லட்சம், ரூ.50 லட்சம் என்று 3 பிரிவுகளில் எதனை வேண்டுமானாலும் வீரர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அதேபோல் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான அடிப்படை விலையாக ரூ.75 லட்சம், ரூ.1 கோடி, ரூ.1.25 கோடி, ரூ.1.5 கோடி, ரூ. 2 கோடி என்று மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, October 2, 2024, 7:40 [IST]
Other articles published on Oct 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+