Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Retentions: 5 வீரர்களை தக்க வைக்கலாம்.. ஒரேயொரு ஆர்டிஎம் வாய்ப்பு? முடிவு எடுத்த பிசிசிஐ!

மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நவம்பர் மாதம் நடக்கவுள்ள நிலையில், அதற்கான விதிமுறைகளை பிசிசிஐ இன்னும் சற்று நேரத்தில் வெளியிடவுள்ளது. இதனிடையே மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளுக்கும் 5 வீரர்களை தக்க வைக்கவும், ஒரு ஆர்டிஎம் வாய்ப்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் ஜூலை 31ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மெகா ஏலம் தொடர்பாகவும், ரிடென்ஷன் பாலிசி குறித்து பேசப்பட்டது. இதன்பின் ஆகஸ்ட் மாத இறுதியில் ஐபிஎல் ரிடென்ஷன் விதிகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசனை முடியாததால், எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை.

ipl 2025 mumbai csk 2025

இந்த நிலையில் பெங்களூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள என்சிஏ அலுவலகத்தில் பிசிசிஐ பொதுக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் ஐபிஎல் விதிமுறைகள் குறித்த செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சில நாட்களுக்கு முன் மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைத்து கொள்ள பிசிசிஐ தரப்பில் அனுமதியளிக்கப்படும் என்று கூறப்பட்டது.

அதேபோல் ஆர்டிஎம் வாய்ப்பு யாருக்கும் கிடையாது என்றும் தகவல் வெளியாகியது. இதனால் ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த அணி தரப்பில் எந்த 5 வீரர்கள் தக்க வைக்கப்பட வேண்டும் என்று பதிவிட தொடங்கினர். இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பான ரிடென்ஷன் பாலிசி தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைத்து கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்றும், மெகா ஏலத்தில் ஒரு ஆர்டிஎம் வாய்ப்பு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை எளிதாக தக்க வைத்துக் கொள்ள முடியும். 5 + 1 ஆர்டிஎம் வாய்ப்பு அளிப்பதால், மீண்டும் முக்கிய வீரர்களை அந்த அணி நிர்வாகங்கள் தக்க வைக்க முடியும்.

அதேபோல் இம்முறை மெகா ஏலத்திற்காக அணிகளின் பர்ஸ் தொகையை ரூ.10 கோடி வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளி வந்துள்ளது. அப்படி ரூ.10 கோடி வரை பர்ஸ் தொகை உயர்த்தப்பட்டால், தக்க வைக்கப்படும் வீரர்களின் ஊதிய நிர்ணயம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை, மும்பை, கேகேஆர் அணியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Story first published: Saturday, September 28, 2024, 15:50 [IST]
Other articles published on Sep 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+