Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: ஒழுங்கா ஆடலைனா காவ்யா மாறன் என்ன செய்வார் தெரியுமா? புவனேஸ்வர் குமார் ஓபன் டாக்!

ஹைதராபாத்: முன்னாள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரரும், தற்போதைய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரருமான புவனேஸ்வர் குமார் காவ்யா மாறன் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் ஐபிஎல் அரங்கில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடும் போட்டிகளை நேரில் பார்க்கும்போது என்ன செய்கிறார்? என்பதை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதே சமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அவர் நிர்வகித்து வரும் முறையையும் பலரும் பாராட்டி உள்ளனர். ஒவ்வொரு முறையும் ஏலத்தில் அவர் அணி தேர்வில் சில அதிரடி வியூகங்களை வகுத்து செயல்படுவார். அதையும் பலரும் பாராட்டி உள்ளனர்.

IPL 2025 Bhuvneshwar Kumar Praises Sunrisers Hyderabad Owner Kavya Maran s Support

இந்த நிலையில் புவனேஸ்வர் குமார் காவ்யா மாறன் உரிமையாளராக அணி வீரர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வார் என்பது பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அவர் அளித்த அந்தப் பேட்டியில், "காவ்யா மாறன் தான் அணியின் உரிமையாளர். அவர் இந்த அணியில் நிறைய முதலீடு செய்து இருக்கிறார். வீரர்களைப் போலவே அணியின் உரிமையாளரும் மனதளவில் மிகவும் கவலையில் இருப்பார். ஆனால் அவர் எப்போதும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த ஒரு வீரரையோ பயிற்சியாளரையோ கேள்வி கேட்டதில்லை."

"நாங்கள் சரியாக விளையாடாத போதும் அவர் எதுவும் சொல்ல மாட்டார். அவர் எப்போதும் எங்களை ஆதரிப்பார். அந்த அணியில் நான் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மிகவும் நன்றாக இருந்தது" என்று புவனேஸ்வர் குமார் கூறியிருக்கிறார். அந்த பேட்டியை தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

செய்தி சுருக்கம்:

  • முன்னாள் சன்ரைசர்ஸ் வீரர் புவனேஸ்வர் குமார், அணியின் உரிமையாளர் காவ்யா மாறனை பாராட்டியுள்ளார்.

  • காவ்யா மாறன் அணி வீரர்களை எப்போதும் ஆதரிப்பதாகவும், மோசமாக விளையாடும்போது கூட கேள்வி கேட்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

  • அணியின் உரிமையாளர் வீரர்களை மனதளவில் ஆதரிப்பது மிகவும் முக்கியம் என்றும் புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

  • புவனேஸ்வர் குமாரின் இந்த பேட்டியை சன்ரைசர்ஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Story first published: Sunday, April 13, 2025, 22:49 [IST]
Other articles published on Apr 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+