Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: பஞ்சாப்க்கு சாதகமாக விழுந்த டாஸ்.. முக்கிய வீரர் இல்லாமல் களமிறங்கிய ஆர்சிபி

அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணியும் பஞ்சாப் அணியும் இறுதிப் போட்டியில் மோதுகிறது. அகமதாபாத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தை பார்ப்பதற்காக சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் திரண்டு இருக்கிறார்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ஸ்ரேயாஸ், நாங்கள் இறுதி போட்டியில் மனதளவிலும் உடலளவிலும் பாசிட்டிவாக இருக்கின்றோம்.

RCB vs PBKS

ரசிகர்கள் அதிக அளவு கூடி இருக்கிறார்கள். இந்த தருணத்தை நான் மகிழ்ச்சியுடன் என்றென்றும் மனதில் வைத்திருப்பேன். வீரர்கள் அனைவரும் நல்ல மனநிலையில் இருக்கிறார்கள். இந்த பெரிய நிகழ்வை அவர்கள் வெற்றிகரமாக கையாள்வார்கள் என்று நம்புகிறேன். ஒருநாள் இடைவெளியில் மீண்டும் விளையாடுவதால் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை.

நாங்கள் நன்றாக இருக்கின்றோம். இதை இறுதி போட்டிக்குள் தான் நாங்கள் விளையாடுவோம். நாங்கள் ஏற்கனவே கோப்பையை வென்று இருப்பது போல் மனதளவில் காட்சிகளை போட்டு பார்த்து கொண்டோம். எங்கள் அணியில் இந்த மாற்றமும் இல்லை என்று ஸ்ரேயாஸ் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து பேசிய ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார், எங்கள் அணியினர் எந்த மாற்றமும் இல்லை. ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. நாங்களும் டாஸ் வென்று இருந்தால் முதலில் பந்துவீச்சு தான் தேர்வு செய்திருப்போம். இதுவரை நாங்கள் அபாரமாக விளையாடி இருக்கிறோம்.

இந்த இறுதிப் போட்டியை இன்னொரு ஒரு ஆட்டமாக தான் நாங்கள் நினைப்போம். இறுதிப்போட்டியில் எங்களுடைய சிறந்த செயல்பாட்டை நாங்கள் தருவோம். இது நிச்சயம் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய மேடை அனைவரும் நன்றாக விளையாட இருக்கிறார்கள் என்றும் நன்றாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன்.

எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை ஆடுகளம் செம்மண் களிமண்ணும் கலந்த வகையில் இருக்கின்றது என்று ரஜத் பட்டிதார் கூறினார். ஆர்சிபி அணியில் டிம் டேவிட் காயம் காரணமாக இன்றைய ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக லிவிங்ஸ்டோன் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Story first published: Tuesday, June 3, 2025, 19:16 [IST]
Other articles published on Jun 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+