Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: பஞ்சாப்க்கு சாதகமாக விழுந்த டாஸ்.. சாஹலுக்கு இடம்.. நாக் அவுட்க்கு தயாரான மும்பை அணி

அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் அணிகள் மோதும் குவாலிஃபையர் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. அகமதாபாத்தில் மழை மேகங்கள் சூழ்ந்து இருப்பதால், மழை குறுக்கிட அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்த சூழலில் முதலில் பந்து வீசும் அணிக்கு சாதகமாக இருக்கும். டக்வொர்த் லூயிஸ் விதி அமலுக்கு வரும் என்பதால் இரண்டாவதாக பேட்டிங் செய்வதே நல்லது. இந்த நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ், முதலில் பந்து வீசுவதாக தெரிவித்துள்ளார்.

MI vs PBKS

இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர்," நாங்கள் முதலில் பந்து வீசப் போகின்றோம். நேற்று மழை பெய்ததால் ஆடுகளம் முழுவதும் மூடப்பட்டிருந்தது.இதனால் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என நினைக்கின்றேன். மேலும் வானமும் மேகமூட்டமாக இருக்கிறது. கடந்த போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவினோம்."

" ஆனால் இது ஒரு புத்தம் புதிய ஆட்டம். எங்களுடைய மனதும் தெளிவாக இருக்கிறது. நாங்கள் இந்த போட்டியை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தோம். எங்கள் அணியின் சூழல் சிறப்பாக இருக்கிறது."

" எங்கள் அணியில் இன்று சாகல் திரும்பியிருக்கிறார் என்று ஸ்ரேயாஸ் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அனியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, நாங்களும் முதலில் பந்து வீச தான் இருந்தோம். தற்போது பேட்டிங் செய்வதால் கள சூழலை புரிந்து கொண்டு பேட்டிங் செய்ய வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்."

"ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக மாறிவிட்டது. எனினும் சரியான முறையில் பந்து வீசினால் நிச்சயம் ஆடுகளத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். எங்கள் அணி பல விஷயங்களில் முன்னேறி இருக்கிறது. ஒருநாள் இடைவெளியுடன் இந்த போட்டியில் விளையாடுகின்றோம்."

"எங்கள் அணியில் பல வீரர்கள் இங்கு பயிற்சி செய்யவில்லை. எனினும் இன்று என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். எங்கள் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ரிச்சர்ட் கிளிசன்க்கு காயம் ஏற்பட்டிருப்பதால் ரீஸ்டோப்ளி அணிக்கு திரும்பிருக்கிறார் என்று ஹர்திக் பாண்டியா கூறினார்.

Story first published: Sunday, June 1, 2025, 19:14 [IST]
Other articles published on Jun 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+