Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: சென்னை-க்கு மாறுகிறது ஐபிஎல் தொடர்.. பிசிசிஐ வைத்த மெகா ட்விஸ்ட்

மும்பை: இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் அதிகரித்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டது. இன்னும் பிளே ஆப் சுற்று உட்பட பதினாறு போட்டிகள் எஞ்சி இருக்கிறது.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்த நிலையில் பல்வேறு நாடுகளும் தங்களது ஊரில் வந்து ஐபிஎல் போட்டிகளை நடத்துமாறு பிசிசிஐக்கு அழைப்பு விடுத்திருந்தது.

IPL Playoffs

எனினும் பிசிசிஐ போட்டிகளை இந்தியாவிலேயே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. தற்போது பாகிஸ்தானின் அச்சுறுத்தல் இந்திய எல்லையோர மாநிலங்களான ராஜஸ்தான், காஷ்மீர், குஜராத் மகாராஷ்டிர போன்ற மாநிலங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. இதன் காரணமாக தென்னிந்தியாவில் போட்டிகளை நடத்தி முடிக்க பிசிசிஐ முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானம், பெங்களூர் சின்னசாமி மைதானம் மற்றும் ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானம் ஆகிய மூன்று கிரிக்கெட் மைதானங்களிலும் போட்டியை நடத்தி முடிக்க பிசிசிஐ முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னையில் முக்கிய போட்டிகள் நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படலாம் என்றும் தெரிகிறது. இந்த மூன்று நகரங்களும் பாதுகாப்பானது என்பதால் போட்டியை இங்கு நடத்துவதில் எந்த சிக்கலும் இருக்காது. எனினும் பாகிஸ்தான் எல்லையில் இருந்து நீண்ட தூரத்தில் இருப்பதால் எந்த ஒரு சிக்கலும் ஏற்படாது.

இதற்கான அட்டவணை மாற்றம் மற்றும் அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகள் மீண்டும் விரைவில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர் சி பி அணி விளையாடும் போட்டிகள் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற அதிக வாய்ப்பு இருக்கிறது. பிசிசிஐயின் இந்த ஆலோசனை கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Story first published: Saturday, May 10, 2025, 18:41 [IST]
Other articles published on May 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+