சென்னை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல முக்கிய வீரர்களை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2025 ஐபிஎல் தொடருக்கு முன்பு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ஒரு அணி அதிகபட்சமாக ஆறு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். இந்த முறை ஒவ்வொரு வீரரையும் தக்க வைக்க அதிக சம்பளம் கொடுக்க வேண்டி இருக்கும்.
ஒரு அணி ஆறு வீரர்களை தக்க வைக்க நினைத்தால் அவர்களுக்கு 79 கோடி ரூபாய் சம்பளம் அளிக்க வேண்டி இருக்கும். எனவே, சிஎஸ்கே அணி அதிகபட்சமாக நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மதிஷா பதிரானா மற்றும் தோனி ஆகிய நால்வரை மட்டுமே சிஎஸ்கே அணி தக்க வைக்கும் என சொல்லப்படுகிறது.

சிவம் துபே, தீபக் சாஹர், அஜின்கியா ரஹானே, மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்குர், டெவான் கான்வே, முஸ்தபிசூர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே போன்ற பிளேயிங் லெவனில் அதிகம் இடம் பெற்ற வீரர்களை சிஎஸ்கே அணி விடுவிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இவர்களில் ஒரு சிலரை மட்டுமே ஏலத்தில் மீண்டும் வாங்க முடியும் என்ற நிலையும் உள்ளது. உதாரணத்திற்கு சிவம் துபே தற்போது இந்திய அணியிலும் இடம் பெற்று இருப்பதால் அவருக்கு ஏலத்தில் மிகப்பெரிய அளவில் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை சிஎஸ்கே அணி மீண்டும்
ஏலத்தில் வாங்குவது என்பது சற்று சவாலானதாகவே இருக்கும்.
2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன் சிஎஸ்கே அணி தக்க வைக்க வாய்ப்புள்ள வீரர்கள் :
ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மதீஷா பதிரானா, தோனி
2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன் சிஎஸ்கே அணி விடுவிக்க வாய்ப்புள்ள வீரர்கள் :
அஜின்க்யா ரஹானே, சிவம் துபே, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்குர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, ஷேக் ரஷீத், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகீஷ் தீக்ஷனா, ரச்சின் ரவீந்திரா, மொயீன் அலி, டேரில் மிட்செல், முஸ்தாபிசுர் ரஹ்மான், அவனிஷ் ராவ் ஆரவெல்லி, டெவோன் கான்வே, சமீர் ரிஸ்வி