Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: சிஎஸ்கே அணி செய்த தவறு.. அடுத்த சீசன் குறைகளை சரி செய்தாரா தோனி?

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக புள்ளி பட்டியலில் 10வது இடத்தை பிடித்திருக்கிறது. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணி ஆறாவது முறையாக கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிளே ஆப்க்கு தகுதி பெறாமல் சிஎஸ்கே அணி வெளியேறி இருக்கிறது.

இந்த தருணத்தில் சிஎஸ்கே அணி நடப்பு சீசனில் பல தவறுகளை செய்திருக்கிறது. பொதுவாக டி20 கிரிக்கெட் தற்போது மாறி வருகிறது அனைத்து அணிகளும் தற்போது அதிரடியாக ரன்களை குவித்து வந்த நிலையில், சிஎஸ்கே மட்டும் மெதுவாக ரன்களை குவித்து வந்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானது.

CSK

இதன் காரணமாக சிஎஸ்கே அணி தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவியது. ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு கடினமான நிலையில் சில வீரர்கள் காயம் அடைந்து விட்டதாக கூறி மாற்று வீரர்களை தேர்வு செய்தது. அதில் வந்தவர்தான் ஆயுஸ் மாத்ரே, பிரவீஸ் மற்றும் உர்வில் பட்டேல் ஆகியோர் ஆவார்கள்.

இந்த மூன்று வீரர்களும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க தொடங்கினர். அப்போதும் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை கொத்தாக இழந்தது. ஆனால் தொடரின் ஆரம்பத்திற்கும் இறுதிக்கட்டத்தையும் ஒப்பிட்டால் நல்ல முன்னேற்றத்தை சிஎஸ்கே அணி கண்டது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த தோனி, அடுத்த சீசனுக்கான அணியை தற்போதைய கட்டமைக்கும் பணியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாகவும், சிஎஸ்கே அணிய இருக்கும் ஓட்டைகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

அதனை தற்போது சிஎஸ்கே அணி சிறப்பாக செய்திருக்கிறது. சிஎஸ்கே அணியின் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருந்தது பேட்டிங் தான். தற்போது பேட்டிங்கில் மூன்று இளம்வீரர்கள் இணைந்து இருப்பதன் மூலம் பலமாக மாறி இருக்கிறது. மேலும் நூர் அகமது, கலீல் அகமத், அன்சூல் காம்போஜ் போன்ற வீரர்களும் சிஎஸ்கே அணியின் பௌலிங் பலப்படுத்தி இருக்கிறார்கள்.

இதன் காரணமாக அடுத்த சீசனில் சிஎஸ்கே அணி அபாரமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சிஎஸ்கே அணியில் ஜடேஜா பெரிய அளவில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சாதிக்கவில்லை. தற்போது சிஎஸ்கே அணியில் ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரும் ஒரு வெளிநாட்டு தொடக்க வீரர் பேட்ஸ்மேனும்,ஒரு வேகப்பந்துவீச்சாளரும் தேவைப்படுகிறார்கள். அதனை சிஎஸ்கே அணி மினி ஏலத்தில் வாங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 26, 2025, 15:48 [IST]
Other articles published on May 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+