Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே அணியின் பிளேயிங் 11-ஐ கணித்த AI.. தோனி, அஸ்வினுக்கு இடம் இருக்கா? பவுலிங்கில் வீக்

சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் பிளேயிங் 11 எப்படி இருக்கும் என ஏ.ஐ. இடம் கேள்வி கேட்கப்பட்டது. 2025 ஐபிஎல் தொடரில் பங்கேற்று உள்ள சிஎஸ்கே அணி வீரர்களின் பலம், பலவீனம் மற்றும் சிஎஸ்கே வீரர்களின் சிறப்பு ஆகியவற்றை வைத்து ஏ.ஐ. சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்து இருக்கிறது. அதை இங்கே பார்க்கலாம்.

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்): திறமையான ஓபனிங் பேட்ஸ்மேன் என்ற அடிப்பைடயிலும், அணியின் நம்பிக்கைக்குரிய வீரர் மற்றும் கேப்டன் என்ற முறையிலும் ருதுராஜை தேர்வு செய்து இருப்பதாக ஏ.ஐ கூறி உள்ளது.

ipl 2025 chennai super kings 2025


டெவான் கான்வே: நியூசிலாந்து அதிரடி வீரரான கான்வே ஓபனிங் இடத்தில் ருதுராஜுடன் சேர்ந்து துவக்கத்தை உறுதிப்படுத்துவார் என கூறி உள்ளது.

ரச்சின் ரவீந்திரா: நியூசிலாந்து அணியின் இளம் ஆல்-ரவுண்டரான ரச்சின் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரை வலுப்படுத்துவார்.

ராகுல் திரிபாதி: மிடில் ஆர்டரில் அனுபவம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மேன். அதிரடியாக ரன் சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பார் என கூறி உள்ளது.

சிவம் துபே: வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான சிவம் துபே, அதிரடி பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் திறமைசாலி என குறிப்பிட்டு உள்ளது.

ரவீந்திர ஜடேஜா: முக்கிய ஆல்-ரவுண்டர், அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் முக்கிய பங்களிப்பை செய்வார் என கணித்து உள்ளது.

மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்): அணியின் அனுபவசாலி, விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன்சியில் ஆலோசனை அளிப்பதில் முக்கிய பங்கு வகிப்பார் என கூறி உள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின்: முன்னணி சுழற்பந்துவீச்சாளர், தனது அனுபவத்தின் மூலம் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை வலுப்படுத்துவார்.

மதீஷா பதிரானா: இளம் வேகப்பந்துவீச்சாளர், அணியின் வேகப்பந்துவீச்சை முன்னேற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பார் என கூறி உள்ளது. .

கலீல் அகமது: இடதுகை வேகப்பந்துவீச்சாளர் என்பதால் பந்துவீச்சில் மாறுபாட்டை கொண்டுவருவார் என குறிப்பிட்டு இவரை தேர்வு செய்து உள்ளது ஏ.ஐ.

நூர் அகமது: ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர், விக்கெட் வீழ்த்துவதில் முக்கிய பங்கு வகிப்பார் என சுட்டிக் காட்டி உள்ளது.

Story first published: Friday, February 7, 2025, 19:18 [IST]
Other articles published on Feb 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+