Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK -சிஎஸ்கே அணியில் தக்க வைக்கப்பட்ட 5 வீரர்கள் பட்டியல்.. ஜடேஜா இருக்காரா? விடுவிக்கப்பட்டது யார்?

சென்னை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து வீரர்களை தக்க வைத்துள்ளது. பலரும் எதிர்பார்த்த வகையில் தோனியை தக்க வைத்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரானா, சிவம் துபே, தோனி ஆகிய ஐந்து வீரர்களை சிஎஸ்கே அணி தக்க வைத்துள்ளது.

இதில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு 18 கோடி சம்பளம் அளிக்கப்பட்டு உள்ளது. மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு 18 கோடி சம்பளம் அளிக்கப்பட்டு உள்ளது. முன்னணி வேகப் பந்துவீச்சாளராக இருக்கும் மதீஷா பதிரானாவுக்கு 13 கோடி சம்பளம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதிரடி பேட்ஸ்மேன் சிவம் துபேவுக்கு 12 கோடி சம்பளம் அளிக்கப்பட்டு இருக்கிறது. தோனியை உள்ளூர் வீரராக (Uncapped) தக்க வைத்து இருக்கும் சிஎஸ்கே, அவருக்கு 4 கோடி மட்டுமே சம்பளம் அளித்து இருக்கிறது.

ipl 2025 chennai super kings cricket

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் -

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்) (18 கோடி), ரவீந்திர ஜடேஜா (18 கோடி), மதீஷா பதிரானா (13 கோடி), சிவம் துபே (12 கோடி), தோனி (4 கோடி)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விடுவிக்கப்பட்ட வீரர்கள் -

மொயீன் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிம்ரன்ஜித் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகீஷ் தீக்ஷனா, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, முஸ்தபிசுர் ரஹ்மான், அவனிஷ் ராவ் ஆரவெல்லி.

பலரும் எதிர்பார்த்த ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, தீபக் சாஹர், டேரில் மிட்செல், ஷர்துல் தாக்குர், சமீர் ரிஸ்வி, துஷார் தேஷ் பாண்டே போன்ற வீரர்களை சிஎஸ்கே அணி தக்க வைக்கவில்லை. அவர்கள் அனைவரும் சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர்.

தற்போது தோனியை தக்க வைத்தாலும் அவர் போட்டிகளில் பேட்டிங் மட்டுமே செய்வார் என கூறப்படுகிறது. அவர் இம்பாக்ட் வீரராக மட்டுமே செயல்பட இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, சிஎஸ்கே அணி முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஒருவரை ஏலத்தில் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Story first published: Thursday, October 31, 2024, 17:40 [IST]
Other articles published on Oct 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+