பெங்களூர்: ஐபிஎல் 2025-ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி முதல் முறையாக 18 ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் rcb அணியை தொடர்ந்து கோப்பை இல்லை என்று கிண்டல் செய்த அனைத்து அணி ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றம் கிடைத்திருக்கிறது.
ஆர்சிபி அணியில் கிண்டல் செய்ய கிடைத்த ஒரு காரணமும் தற்போது பறிபோய்விட்டது. இந்த சூழலில் ஆர் சி பி என் ரசிகர்கள் தற்போது மற்ற அணிக ரசிகர்களை நாங்களும் கோப்பை வாங்கி விட்டோம் என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.

குறிப்பாக சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து விட்டதாக தற்போது சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.இந்த சூழலில் ஆர் சி பி அணி கோப்பை வென்ற அதே மேடையில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த சிஎஸ்கே அணியும் விருது வென்று தமிழக ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்திருக்கிறது.
அதாவது ஒவ்வொரு சீசனிலும் கிரிக்கெட் நன்னடத்தை விதிமுறைகளை பின்பற்றி விளையாடும் அணிக்கு பேர் பிளே விருது வழங்கப்படும். அந்த வகையில் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த விருதுக்கான புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.
சிஎஸ்கே அணியை வேறு எந்த அணியும் முந்தாத சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விருது வழங்கப்பட்டது. இதனை உற்சாகமாக தமிழக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சிஎஸ்கே இல்லாமல் ஐபிஎல் இல்லை என்பதற்கு இந்த ஒரு விஷயம் உதாரணமாக இருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் தங்களது அணியை கிண்டல் செய்த ஆர் சி பி ரசிகர்களுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் அடுத்த வருடம் கண்டிப்பாக வட்டியும் முதலுமாக நாங்கள் திருப்பித் தருவோம் என்று கூறியிருக்கின்றனர். அடுத்த முறை பட்டாபிஷேகமும் முதல் மரியாதை எங்கள் அணிக்கு தான் கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டுக்கான அணியை தாங்கள் தற்போது தயார் செய்து விட்டோம் என்று குறிப்பிட்டுள்ள சிஎஸ்கே ரசிகர்கள், ருதுராஜ், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரவீஸ், உர்வில் பட்டேல் போன்ற வீரர்கள் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுப்பார்கள் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.