IPL 2025: என் வாழ்நாளில் முக்கியமான நாள்.. ஆரம்பத்தில் பயமாக இருந்தது.. அறிமுக வீரர் கார்பின் போஸ்
மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தன்னுடைய முதல் ஆட்டத்தை தென்னாப்பிரிக்கா வீரர் கார்பின் போஸ் களமிறங்கினார். தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட அவர் நான்கு ஓவர்கள் வீசி 26 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இதேபோன்று பேட்டிங்கில் 10 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார். ஐபிஎல் ஏலத்தில் கார்பின் போஸ் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் psl தொடரில் அவர் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இதனை அடுத்து மும்பை அணி மாற்று வீரராக போசை அழைத்தது. இதனால் பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகியதால் சட்டரீதியான நடவடிக்கைக்கு ஆளானார். எந்த நிலையில் தனது ஐபிஎல் அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கார்பின் போஸ், எனக்கு காலையில் தான் தெரியவந்தது. இன்று நான் விளையாட போகிறேன் என்று எங்கள் அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே தான் இந்த தகவலை எனக்கு கூறினார்.
இதை அடுத்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். இது நிச்சயம் எனக்கு ஸ்பெஷலான பீலிங் தான். இன்று எங்கள் சகோதரரின் பிறந்தநாள் கூட. இந்த ஸ்பெஷலான தினத்தில் நான் மும்பை அணிக்காக அறிமுகமானது மிகவும் மகிழ்ச்சி. நான் பந்தை பார்த்து பேட்டிங்கில் ஆட வேண்டும் என்று தான் நினைத்தேன். முதலில் எனக்கு கொஞ்சம் பயமாக தான் இருந்தது.
இதனால் பந்தை எப்படியாவது அடித்து விட வேண்டும் என்பதில் மட்டும் தான் நான் குறியாக இருந்தேன். இந்த தருணத்திற்காக நான் கடுமையாக உழைத்து இருக்கின்றேன். இதேபோன்று மும்பை அணி நிர்வாகமும் எனக்கு பல உதவிகளை செய்திருக்கின்றது. எனக்கு அணியில் எந்த இடத்தில் பேட்டிங் செய்ய சொன்னாலும் எனக்கு சந்தோஷம்தான்.நான் பேட் மற்றும் பந்துவீச்சு பில்டிங் என அணியின் வெற்றிக்கு பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.
மும்பை அணியில் இடம் பிடித்திருப்பது எனக்கு மிகவும் பெருமையான விஷயமாக கருதுகிறேன் என்று கார்பின் போஸ் தெரிவித்துள்ளார்.மெகா ஏலத்தின் போது இவரை சிஎஸ்கே அணி தேர்வு செய்யும் என எதிர்பார்த்த நிலையில், விலை போகவில்லை. ஆனால் தற்போது மாற்று வீரராக களமிறங்கி பட்டையை கிளப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications