Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025:இவ்வளவு நாளா இந்த தங்கத்தை எங்க டா வச்சி இருந்தீங்க? 17 வயதில் தெறிக்கவிட்ட CSK வீரர் ஆயுஷ்

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வருவதால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் பழைய ஸ்டைலில் இருப்பதாக ரசிகர்களும் குற்றம் சாட்டி வந்தனர்.

நடப்பு சீசனில் பவர்பிளேவில் குறைந்த ரன்கள் அடித்த அணி என்றால் அது சிஎஸ்கே தான். சிஎஸ்கே வின் தோல்விக்கு இதுவும் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பவர் பிளேவில் மீண்டும் டெஸ்ட் இன்னிங்சை ஆடி ரசிகர்களை சிஎஸ்கே வெறுப்பேற்றியது.

Ayush Mhatre

முதல் இரண்டு ஓவர்களில் சிஎஸ்கே அணி வெறும் எட்டு ரன்ளை மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள ரச்சின் ரவீந்திரா ஆட்டம் இழந்தவுடன் களத்திற்கு 17 வயதான ஆயுஷ் மாத்ரே வந்தார். என்னடா பேட்டிங் செய்து கொண்டு இருக்கீங்க? இப்படிதாண்டா இனி டி20 கிரிக்கெட் விளையாடனும் என்று சிஎஸ்கே சீனியர் வீரர்களுக்கு கிளாஸ் எடுத்தது போல் அவருடைய பேட்டிங் அமைந்தது.

கொஞ்சம் கூட பயமே இன்றி தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சியின் ஆழ்த்தினார் ஆயுஷ் மாத்ரே. சிக்சர், பவுண்டரி என தெறிக்க விட சிஎஸ்கே அணியின் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது. ஆயுஷ் மாத்ரேவின் வேகபந்துவீச்சாளர்களை பதம் பார்க்கிறார் என தெரிந்தவுடன் ஹர்திக் பாண்டியா சுழற்பந்து வீச்சாளரை பந்து வீச அழைத்தார். 15 பந்துகளை எதிர்கொண்ட ஆயுஷ் மாத்ரே 32 ரன்களை சேர்த்தார்.

இதில் நான்கு பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். ஆயுஷ் மாத்ரேவின் ஸ்டிரைக் ரேட் 213 என்ற அளவில் இருந்தது. இதனால் 3 புள்ளி ஒரு ஓவரில் 16 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த நிலையில் களத்திற்கு வந்த ஆயுஷ் மாத்ரே 6.5 ஓவரில் சிஎஸ்கே அணியின் ஸ்கோரை 57 ரன்கள் என்ற அளவில் உயர்த்தி விட்டு சென்றார்.

இந்த ஆட்டத்தை பார்த்து மும்பை வீரர் சூரியகுமார் அவருக்கு வந்து கை கொடுத்து விட்டு சென்றார். ஆயுஷ் மாத்ரேவை பார்த்து இந்த தங்கத்தை இவ்வளவு நாளா ஏலத்திலே எடுக்காமல் வைத்து விட்டு இருக்கிறீர்களே என்று சிஎஸ்கே ரசிகர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மேலும் இது போன்றது தான் இனி அதிரடி ஆட்டத்தில் சிஎஸ்கே அணி விளையாட வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Story first published: Sunday, April 20, 2025, 20:28 [IST]
Other articles published on Apr 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+