Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: 17 வயதில் ஆர்சிபி-யை தெறிக்கவிட்ட ஆயுஷ் மாத்ரே.. 6 ரன்களில் சதத்தை தவறவிட்ட சிஎஸ்கே ஹீரோ

பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மற்ற அனைத்து அணிகளும் இளம் வீரர்களை அறிமுகப்படுத்துகிற நிலையில், சிஎஸ்கே அணி மட்டும் தொடர்ந்து சீனியர் வீரர்கள் பயன்படுத்தி தோல்வியை தழுவியது. இந்த நிலையில், ருதுராஜ்க்கு காயம் ஏற்பட்ட நிலையில் தொடரின் பாதியில் தான் சிஎஸ்கே அணிக்குள் வந்தார்.

17 வயது வீரரான ஆயுஸ் மாத்ரேவுக்கு அணி நிர்வாகம் ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்கிறது என்றால் அவர் நிச்சயம் திறமை வாய்ந்த வீரராக தான் இருப்பார். இந்த சூழலில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆயுஷ் மாத்ரே அபாரமாக விளையாடி 32 ரன்கள் விளாசினர்.

Ayush Mhatre

இதேபோன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 30 ரன்கள் எடுத்த ஆயுஸ் மாத்ரே, பஞ்சாப் அணிக்கு எதிராக வெறும் 7 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இந்த சூழலில் ஆர் சி பி அணிக்கு எதிராக நடைபெற்ற இன்றைய முக்கிய ஆட்டத்தில் ஆயுஸ் மாத்ரே அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

ஆர்சிபி அணியின் பந்துவீச்சை சின்னசாமி மைதானத்தில் நான்கு பக்கமும் சிதறடித்தார். அதேசமயம் அனைத்து பந்தையுமே சுற்றாமல் சிங்கிள்ஸ் டபுள்ஸ் எடுப்பது பில்டர்கள் கேப்பை பார்த்து பவுண்டரி அடிப்பது என தன்னுடைய இன்னிங்சை கட்டமைத்தார். குறிப்பாக ஒரே ஓவரில் 5 பவுண்டரி ஒரு சிக்சர் அடித்து ஆயுஷ் மாத்ரே அசத்தினார்.

இப்படி வேகமும், விவேகமும் கலந்து விளையாட 25 பந்துகளில் ஆயுஷ் மாத்ரே அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய ஜடேஜா உடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இதனால் சிஎஸ்கே அணி வெற்றியின் அருகே சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் ஆயுஷ் மாத்ரே சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 94 ரன்கள் எடுத்த நிலையில் நுங்கி கிடி பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தார்.

அப்போது அவர் குருனல் பாண்டியாவிடம் கேட்ச் ஆனார். 94 ரன்கள் குவித்து ஆயுஷ் மாத்ரே ஆட்டம் இழந்தார். இதில் ஒன்பது பவுண்டர்களும் 5 சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் சிஎஸ்கே அணியில் இளம் வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இது என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. இதே போன்று நடப்பு சீசனில் சிஎஸ்கே வீரர் அடித்த தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோரும் இதுவாகும்.

Story first published: Saturday, May 3, 2025, 23:18 [IST]
Other articles published on May 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+