IPL 2025- பவர்பிளேவில் CSK மீண்டும் தடுமாற்றம்.. 3 வீரர்கள் அவுட்..மானத்தை காப்பாற்றிய 17 வயது வீரர்
சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாழ்வா?சாவா? என்ற கட்டத்தில் ஹைதராபாத் அணியை இன்று எதிர்கொண்டது. சிஎஸ்கே அணி இந்த தொடரில் 6 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கே அணி பவர்பிளேவில் மோசமாக விளையாடி வருகிறது தான் காரணம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் குற்றம் சாட்டு வருகின்றனர்.
மற்ற அணிகள் எல்லாம் பவர் பிளேவில் 60, 70 ரன்கள் எடுக்கும் நிலையில் சிஎஸ்கே அணி மட்டும் தடுமாறி வந்தது. இதற்கு காரணம் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருந்த தொடக்க வீரர்கள் சரியாக விளையாடவில்லை.

குறிப்பாக ரச்சின் ரவீந்திரா தடுமாறி வந்தார். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் அவர் அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில் ஷேக் ரசித் மற்றும் ஆயுஷ் மாத்ரே என இரண்டு இளம் வீரர்கள் இன்று தொடக்க வீரராக களம் இறங்கினர். இதில் சேக் ரஷித் முதல் பந்திலே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். இதனை அடுத்து நம்பர் மூன்றாவது வீரராக ஷாம் கரன் களத்திற்கு வந்தார்.
எனினும் 17 வயது வீரரான ஆயுஷ் மாத்ரே தொடர்ந்து அதிரடி காட்டினார் பவர்பிளேவில் சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் கடும் நெருக்கடியை கொடுத்தும் அவர் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆறு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்ட முயன்ற அவர் 19 பந்துகளை எதிர்கொண்டு 30 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
இதேபோன்று ஷாம்கரன் ஒரு பவுண்டரி மட்டும் அடித்த நிலையில் 10 பந்துகளின் அவர் 9 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இதனால் சிஎஸ்கே அணி பவர் பிளே முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் சேர்த்தது. இதில் ஆயுஷ் மாத்ரே மட்டும் 30 ரன்கள் சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே அணியில் இளம் வீரர்கள் உள்ளே வந்தவுடன் பயம் இன்றி அதிரடியாக ஆடுகிறார்கள். இதை சிஎஸ்கே முன்பே செய்திருந்தால் இந்தப் பிரச்சனை தீர்ந்திருக்கும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி தான் குறைந்த ரன்களை பவர் பிளேவில் அடித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications