Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- இந்தியாவை தோற்கடித்த இவரை தான் சிஎஸ்கே, மும்பை குறிவைக்க போகுது.. ஏலத்தில் எகிறிய மவுசு

மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்களை இலக்காக நிர்ணயித்து அபாரமாக பந்து வீசி வெற்றியின் அருகே வந்து தோல்வியை தழுவியது. தென்னாபிரிக்க அணி இந்த போட்டியில் தோற்றதற்கு முக்கிய காரணம் ஜெரால்ட் கோயிட்சே தான். இவர் பந்துவீச்சில் நான்கு ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்த சூழலில் பேட்டிங்கில் தென்னாபிரிக்க அணி என்பது ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது களத்திற்கு வந்த ஜெரால்ட் கோயிட்சே அபாரமாக விளையாடி 9 பந்துகளில் 19 ரன்கள் விளாசினார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 211 என இருந்தது.

ipl 2025 gerald coetzee csk mi


இதில் இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும். ஜெரால்ட் கோயிட்சே, 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி 10 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணி ஜெரால்ட் கோயிட்சேவை ஏலத்தில் தக்க வைக்கவில்லை. இதனால் மெகா ஏலத்தில் மீண்டும் அவர் பங்கேற்கப் போகிறார்.

இந்த தருணத்தில் இந்தியாவுக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடியதால் ஏலத்தில் அவருடைய மவுசு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் ஜெரால்ட் கோயிட்சேவை எப்படியாவது தங்களது அணிக்கு கொண்டு வர வேண்டும் என சிஎஸ்கே தீவிரம் காட்டி வருகிறது. ஏனென்றால் அமெரிக்காவில் நடைபெற்று வரும் எம்எல்சி கிரிக்கெட் தொடர் மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஸே 20 தொடர் என இரண்டிலுமே சூப்பர் கிங்ஸ் அணிக்காக தான் அவர் விளையாடி வருகிறார்.

இதனால் ஐபிஎல் தொடரிலும் ஜெரால்ட் கோயிட்சேவை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அணி அப்போதே ஆர்வம் காட்டியது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஜெரால்ட் கோயிட்சேவை மீண்டும் ஏலத்தில் எடுக்க ஆர் டி எம் கார்டை பயன்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மெகா ஏலத்திற்கு முன்பு தற்போது ஜெரால்ட் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருப்பதால் ஒவ்வொரு அணியின் கவனத்தையும் அவர் ஈர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, November 10, 2024, 23:49 [IST]
Other articles published on Nov 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+