சென்னை : தீபாவளி திருநாள் அன்று நாம் பட்டாசு வெடித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் கிரிக்கெட் களத்தில் மிகப்பெரிய அணுகுண்டு வெடிக்கப் போகிறது. ஆம், எந்த வீரர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவிக்க அக்டோபர் 31ஆம் தேதி மாலை 5 மணி தான் கடைசி
ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணியும் ஏலத்திற்கு முன்பே ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. இந்த சூழலில் ஒவ்வொரு அணிகளும் எந்த வீரர்களை தேர்வு செய்வது என்பது குறித்து தற்போது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த தருணத்தில் சிஎஸ்கே அணி ஏலத்திற்கு முன்பு எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் என்பதை தற்போது பார்க்கலாம். சிஎஸ்கே அணி ஆறு வீரர்களுக்கு பதில் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கையிருப்பில் அதிக தொகையை வைத்துக்கொண்டு ஏலத்தில் செல்ல சிஎஸ்கே முடிவெடுத்து இருக்கிறது.
தோனிக்கு தற்போது 43 வயது ஆகிவிட்டது. இதனால் அவர் கிரிக்கெட் விளையாடுவது கடினம் தான். எனினும் இம்பேக்ட் விதி காரணமாக தோனி வெறும் பேட்டிங் அல்லது விக்கெட் கீப்பிங் மட்டும் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் தாம் விளையாடுவது குறித்து சிதம்பரம் ரகசியம் போல் தோனி கடைப்பிடித்து வருகிறார்.
இந்த தருணத்தில் சிஎஸ்கே அணி ஏலத்திற்கு முன்பு எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் என்பதை தற்போது பார்க்கலாம். சி எஸ் கே அணி ஆறு வீரர்களுக்கு பதில் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கையிருப்பில் அதிக தொகையை வைத்துக்கொண்டு ஏலத்தில் செல்ல சிஎஸ்கே முடிவெடுத்து இருக்கிறது.
அந்த வகையில் முதல் வீரராக சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை தேர்வு செய்யப் போகிறது. இதனால் ருதுராஜ்க்கு 18 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கலாம். இரண்டாவது வீரராக சிஎஸ்கே அணி அதிரடி ஆல்ரவுண்டர் ஜடேஜாவை தேர்வு செய்யும். ஆனால் ஜடேஜா தற்போது இந்திய அணிக்காக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் தடுமாறி வருகிறார்.
ஏற்கனவே டி20 உலக கோப்பை போட்டிக்கு பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்தும் ஜடேஜா ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் அவரை தேர்வு செய்வது சரி கிடையாது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறினாலும் தலைகீழாக தான் குதிப்பேன் என்று முடிவை தான் சிஎஸ்கே எடுக்கும்.
அது மட்டுமல்லாமல் ஜடேஜா எப்போது எப்படி விளையாடுவார் என்பதை நம்மால் கணிக்கவே முடியாது. மூன்றாவது வீரராக சிஎஸ்கே அணி நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் இலங்கையின் பதிராணாவை தான் தேர்வு செய்யும். இதன் மூலம் சிஎஸ்கே வின் பிரச்சனை தீர்ந்துவிடும் பதிராணா வந்த பிறகுதான் சிஎஸ்கே அணி 2023 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது.
2024 ஆம் ஆண்டு பதிராணா வெறும் ஆறு போட்டிகளில் தான் விளையாடினார். காயம் காரணமாக பதிராணா விலகியதால் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பதிராணா சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக விளங்குவார்.
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் தோனி இருக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது. தோனி விளையாடுகிறேன் என ஒப்புக்கொண்டால் அவருக்கு நான்கு கோடி ரூபாய் கொடுத்து தேர்வு செய்துவிடலாம். இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு ஏலத்திற்கு செல்லும் போது இரண்டு RTM கார்டு கிடைக்கும்.
இதை வைத்து தங்கள் அணிக்காக ஏற்கனவே விளையாடிய வீரர்களை மீண்டும் வாங்க முடியும். அப்படி சிஎஸ்கே அணி யாரை வாங்கும் என்றும் நாம் தற்போது பார்க்கலாம். சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக கான்வே இருக்கிறார்.
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கான்வே கடந்த சீசனில் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியவில்லை. இதனால் கான்வேவை rtm கார்ட் மூலம் சிஎஸ்கே அணி வாங்கிவிடும். இந்த சூழலில் ஆறாவது வீரராக சிஎஸ்கே அணி சிவம் துபேவை தேர்வு செய்யக்கூடும். அதிரடி சிக்ஸர் மன்னனாக சிவம் துபே உள்ள நிலையில் அவரை சிஎஸ்கே தேர்வு செய்யலாம்.
எனினும் சிவம் துபே கடந்த சில போட்டிகளாக சரியாக விளையாடாதது ரசிகர்களுக்கு கவலை அளிக்கிறது. எனினும் சிஎஸ்கே அணி அவர் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறது. இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு தொடக்க வீரர்கள் ஒரு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஒரு வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர், விக்கெட் கீப்பர்,டெத் பௌலிங் வீசக்கூடிய ஒரு வேகப்பந்துவீச்சாளர் கிடைத்து விடுவார்கள்.
ஒருவேளை தோனி தாம் விளையாடவில்லை என அறிவித்து விட்டால் அவருக்கு பதில் சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி தேர்வு செய்யும். இதனால் ஏலத்திற்கு செல்லும் போது ஒரு நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனை சிஎஸ்கே அணி தேடும். தோனி விளையாடும் பட்சத்தில் ஆறாவது முறையாக கோப்பையை வென்று வெற்றியுடன் தோனியை சிஎஸ்கே வழி அனுப்பி வைக்குமா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.