Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 ரிடென்ஷன் போதும்.. மெகா ஏலத்திற்கு மாஸ் திட்டத்துடன் களமிறங்கும் சிஎஸ்கே, மும்பை.. ஏன் தெரியுமா?

மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் இறுதியில் சவுதி அரேபியாவில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் ரிடென்ஷன் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு அணிக்கும் 6 வீரர்களை ரிடெய்ன் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 6 வீரர்களை ரிடெய்ன் செய்தால், அந்த அணிக்கு ரூ.79 கோடி வரை செலவாகும். இதனால் மீதமுள்ள ரூ.41 கோடியை வைத்து தான் சுமார் 14 முதல் 17 வீரர்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். மெகா ஏலத்தில் ஏதாவது ஒரு வீரருக்கு மட்டுமே பெரிய தொகை கொடுக்க முடியும் என்ற நிலை ஏற்படும். இதனால் சிஎஸ்கே, மும்பை போன்ற பெரிய அணிகளே 4 ரிடென்ஷனுக்கு போல் போவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

ipl 2025 chennai super kings ms dhoni 2025

மும்பை அணியை பொறுத்தவரை 6 வீரர்களை ரிடெய்ன் செய்வதற்கு சரியான வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோரை மும்பை அணி ரிடெய்ன் செய்ய முடிவு செய்யும். ஆனால் 5 வீரர்களை ரிடெய்ன் செய்தாலே ரூ.75 கோடி காலியாகும். மீதமுள்ள ரூ.45 கோடியை வைத்து மெகா ஏலத்தை சந்திக்க வேண்டிய நிலை வரும்.

அதேபோல் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பதிரானா ஆகியோரை ரிடெய்ன் செய்துவிட்டு, தோனியை அன்-கேப்ட் வீரராக தக்க வைக்க வாய்ப்புகள் உள்ளது. இப்படி 4 வீரர்களை மட்டும் ரிடெய்ன் செய்தால், ரூ. 47 கோடி வரை செலவாகும். மீதமுள்ள ரூ.73 கோடியுடன் தாராளமாக சிஎஸ்கே அணி மெகா ஏலத்தை சந்திக்கும்.

ஆனால் பஞ்சாப், டெல்லி, லக்னோ, குஜராத், ஆர்சிபி போன்ற அணிகள் சிஎஸ்கே அணியை விடவும் கூடுதல் தொகையுடன் ஏலத்தை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் மெகா ஏலத்தை தேவையான வீரரை வாங்க முடியாத சூழல் ஏற்படலாம். இதற்கேற்ப சிஎஸ்கே அணி கூடுதலாக தீபக் சஹர் அல்லது சிவம் துபேவை தக்க வைக்க வாய்ப்புகள் உள்ளது.

இதனால் மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகளை பொறுத்தவரை ஒரேயொரு ஆர்டிஎம் கார்டுகளுடன் மெகா ஏலத்தை சந்திக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகளின் வீரர்களுக்கு மெகா ஏலத்தில் அதிக கிராக்கி ஏற்படும். சிவம் துபே, திலக் வர்மா, இஷான் கிஷன் போன்ற வீரர்களுக்கு ரூ.18 கோடிக்கு மேல் கூட ஏலம் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

அதேபோல் கடந்த மெகா ஏலத்தை சிஎஸ்கே மற்றும் மும்பை போன்ற அணிகள் ரூ.48 கோடி முதல் ரூ.52 கோடி வரை மட்டுமே வைத்து சந்தித்த வரலாறும் உள்ளது. ஏனென்றால் இந்த இரு அணிகளும் பர்ஸ் தொகையில் 90 சதவிகித பணத்தை பிளேயிங் லெவனை கட்டமைக்கவே செலவு செய்துவிடுவார்கள். மீதமுள்ள தொகைக்கு தான் பேக் அப் வீரர்களை வாங்குவார்கள்.

அதுமட்டுமல்லாமல் உள்ளூர் வீரர்கள் அடிப்படை விலைக்கே கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் தங்களின் ஸ்கைவ்டிங் குழுவினரை வைத்து நிச்சயம் உள்ளூர் வீரர்கள் பலரையும் சோதனைக்கு அழைத்து முடிவு செய்வார்கள். இதனால் சிஎஸ்கே மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் ஒரேயொரு ஆர்டிஎம் கார்டுடன் களமிறங்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

Story first published: Wednesday, October 2, 2024, 13:39 [IST]
Other articles published on Oct 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+