Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: CSK அணிக்கு வருகிறார் 17 வயது மும்பை வீரர்.. சென்னைக்கு அழைத்த அணி நிர்வாகம்

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் மிகவும் மோசமாக அமைந்திருக்கிறது. சிஎஸ்கே அணியில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தினால் மட்டுமே செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலை இருக்கிறது. தோனியை கோப்பையுடன் வழி அனுப்ப வேண்டும் என சிஎஸ்கே அணி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

சிஎஸ்கே அணி மெகா ஏலத்தில் விஜய் சங்கர், தீபக் ஹூடா ராகுல் திருப்பாதி ஆகியோரை பெரியதாக நம்பினார். ஆனால் இந்த மூன்று வீரர்களுமே சோபிக்க தவறிவிட்டனர். இதன் காரணமாக சிஎஸ்கே அணி தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தற்போது 17 வயதான மும்பை வீரர் ஒருவரை தங்களுடைய கேம்புக்கு அழைத்து இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

CSK

கடந்த ரஞ்சி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே கோப்பையில் மும்பை அணிக்காக அபாரமாக விளையாடியவர் தான் ஆயுஸ் மாத்ரே, கடந்த இராணி கோப்பையில் மும்பை அணிக்காக அறிமுகமானார். ரஞ்சி கோப்பையில் அபாரமாக விளையாடிய அவர், சித்தேஷ் லாட், சர்துல் தாக்கூர், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு பிறகு அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெயரை பெற்றார்.

இதேபோன்று விஜய் ஹசாரே கோப்பையில் மும்பை அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் ஆயுஸ் மாத்ரேவுக்கு இருக்கிறது. ஏழு இன்னிங்ஸில் 458 ரன்கள் குவித்தார். இதில் இரண்டு சதம் அடங்கும். குறிப்பாக நாகலாந்து எதிராக 151 ரன்கள் அடித்தார். இப்படி பல சாதனைகளை படைத்த 17 வயது வீரரான ஆயுஷ் மாத்ரே ஏலத்தில் எந்த அணியும் எடுக்காதது தான் சோகம்.

இந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணி அவரை சென்னைக்கு அழைத்து இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சி எஸ் கே, சிஇ ஓ காசி விஸ்வநாதன், நாங்கள் தற்போது யாரையும் அணியும் தேர்வு செய்யவில்லை. ஒரு வேலை தேவைப்பட்டால் நிச்சயம் நாங்கள் புதிய வீரர்களை எடுப்போம். தற்போது அந்த வீரரின் திறனை சோதிப்பதற்காக சிஎஸ்கே கேம்புக்கு அழைத்து இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.சிஎஸ்கே அணியில் ஏற்கனவே சாயிக் ரஷித், சித்தார்த் ராமகிருஷ்ண கோஸ், வான்ஸ் பேடி போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் தற்போது புதிய வீரர் சேர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Thursday, April 3, 2025, 18:39 [IST]
Other articles published on Apr 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+