Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: CSK அணி முதலில் பேட்டிங்.. பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்.. இம்பேக்ட் வீரர் யார்?

டெல்லி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது. பத்தாவது இடத்தை எந்த அணி பிடிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுவரை சிஎஸ்கே அணி ஐபிஎல் வரலாற்றில் பத்தாவது இடத்தை நிறைவு செய்தது கிடையாது. இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் ஒன்பதாவது இடத்தை பிடிக்க முடியும்.

CSK vs RR

இந்த சூழலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சஞ்சு சாம்சன், நாங்கள் முதலில் பந்து வீச போகிறோம். டெல்லிக்கு எதிரான கடைசி போட்டியில் இங்கு விளையாடும் போது ஆடுகளத்தில் ஏதோ இருக்கின்றது. அதனை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம்.

எங்கள் அணியில் இருக்கும் அனைவரும் மேட்ச் வின்னர்கள் தான். ஒவ்வொருவரும் மேட்ச் வின்னர் போல் யோசிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது அறிவை பயன்படுத்திக் கொண்டு தைரியமாக விளையாட வேண்டும். எங்கள் அணியில் இன்று இரண்டு மாற்றங்கள் இருக்கிறது.

யுத்வீர் சிங் இன்று விளையாடுகிறார் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய சிஎஸ்கே அணி கேப்டன் தோனி, எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டுக்கான அணியை கட்டமைக்கும் பணியை தீவிரமாக செய்து வருகின்றோம்.

எங்கள் அணியின் பவுலிங், சில விஷயங்கள் செய்ய வேண்டும். நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்த பிறகு அடுத்த ஆண்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான கேள்விக்கு இப்போது விடை தேடி கொண்டிருக்கின்றோம்.

தற்போது காம்பினேஷனை சரி செய்து கொண்டு மினி ஏலத்தில் இரண்டு வீரர்களை வாங்க வேண்டும். இந்த தொடரின் ஆரம்பத்தில் நாங்கள் தடுமாறினோம். இந்த தொடர் முழுவதும் நாங்கள் அழுத்தத்தில் இருந்தோம். எங்களால் சரியாக செயல்பட முடியவில்லை. கிரிக்கெட்டில் அனைத்து ஷாட்டுகளையும் ஒரே போட்டியில் ஆட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

சரியான ஷாட்களை தேர்ந்தெடுத்து விளையாடினால் போதும் என்று தோனி கூறியுள்ளார். சிஎஸ்கே அணியில் இன்றைய ஆட்டத்தில் ஆயுஸ் மாத் ரே, கான்வே, உர்வில் பட்டேல், ஜடேஜா, பிரவீஸ், சிவம் துபே, தோனி,காம்போஜ், அஸ்வின் நூர் அஹ்மத், கலீல் அஹ்மத் ஆகியோர் இருக்கிறார்கள். பதிரனா இம்பேக்ட் வீரராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, May 20, 2025, 19:24 [IST]
Other articles published on May 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+