Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- அதிரடியாக ரன் குவித்த சிஎஸ்கே வீரர்கள்.. ஆடுகளத்தில் வைக்கப்பட்ட சூனியம்.. சரிந்த விக்கெட்

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாழ்வா?சாவா? என்ற கட்டத்தில் ஹைதராபாத் அணியை இன்று எதிர்கொண்டது. சிஎஸ்கே அணி இந்த தொடரில் 6 போட்டிகளில் தோல்வியை தழுவி இருந்தது.. இதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கே அணி பவர்பிளேவில் மோசமாக விளையாடி வருகிறது தான் காரணம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் குற்றம் சாட்டு வருகின்றனர்.

மற்ற அணிகள் எல்லாம் பவர் பிளேவில் 60, 70 ரன்கள் எடுக்கும் நிலையில் சிஎஸ்கே அணி மட்டும் தடுமாறி வந்தது. இதற்கு காரணம் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருந்த தொடக்க வீரர்கள் சரியாக விளையாடவில்லை.

CSK vs SRH

குறிப்பாக ரச்சின் ரவீந்திரா தடுமாறி வந்தார். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் அவர் அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில் ஷேக் ரசித் மற்றும் ஆயுஷ் மாத்ரே என இரண்டு இளம் வீரர்கள் இன்று தொடக்க வீரராக களம் இறங்கினர். இதில் சேக் ரஷித் முதல் பந்திலே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். இதனை அடுத்து நம்பர் மூன்றாவது வீரராக ஷாம் கரன் களத்திற்கு வந்தார்.

எனினும் 17 வயது வீரரான ஆயுஷ் மாத்ரே தொடர்ந்து அதிரடி காட்டினார் பவர்பிளேவில் சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் கடும் நெருக்கடியை கொடுத்தும் அவர் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆறு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்ட முயன்ற அவர் 19 பந்துகளை எதிர்கொண்டு 30 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

இதேபோன்று ஷாம்கரன் ஒரு பவுண்டரி மட்டும் அடித்த நிலையில் 10 பந்துகளின் அவர் 9 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இதனால் சிஎஸ்கே அணி பவர் பிளே முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் சேர்த்தது. இதில் ஆயுஷ் மாத்ரே மட்டும் 30 ரன்கள் சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தென்னாப்பிரிக்காவில் 21 வயது வீரரான டெவால்ட் பிரவீஸ் சிஎஸ்கே அணிக்காக தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்கினார். ஆடுகளம் தோய்வாக இருந்த நிலையில் பிரவீஸ் என்ன செய்து விடப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் முதலில் கொஞ்சம் பொறுமையாக விளையாடிய பிரவீஸ் பின்னர் தம்மை ஏன் ரசிகர்கள் குட்டி டிவில்லியர்ஸ் என்று அழைக்கிறார்கள் என்பதை நிரூபித்தார்.இந்த நிலையில் ஆட்டத்தில் 12வது ஓவரில் தான் பிரவீஸ், தன்னுடைய ருத்ர தாண்டவத்தை ஆடினார். கமெண்டு மெண்டீஸ் வீசிய ஓவரில் மூன்று சிக்ஸர்களை விளாசி சிஎஸ்கே அணி அந்த ஓவரில் 20 ரன்கள் விளாசியது. இதனால் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. 11.4 ஓவரில் எல்லாம் சிஎஸ்கே அணி 100 ரன்களை கடந்ததால் ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால் ஆட்டத்தின் 13 வது ஓவரில் ஹர்சல் வீசிய பந்தை அடித்த பிரவீஸ் எதிர்பார்த்தார். ஆனால் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த கமிண்டு மெண்டிஸ் ஓடி வந்து பாய்ந்து கேட்ச் பிடித்து ஆட்டத்தையே தலைகீழ் மாற்றினார். இதன் மூலம் பிரவீஸ் 25 பந்துகளில் 42 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதில் நான்கு சிக்ஸர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும்.

இதனையடுத்து சிஎஸ்கே அணிக்கு தொடர்ந்து சரிவே ஏற்பட்டது. அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட சிவம் துபே 9 பந்துகளில் 12 ரன்கள் சேர்த்தார். இந்த சூழலில் களத்திற்கு வந்த தல தோனியும் ஹர்சல் பட்டேல் பந்தில் 10 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தார். இறுதியில், தீபக் ஹுடா மட்டும் தட்டு தடுமாறி 22 ரன்கள் எடுக்க, சிஎஸ்கே அணி 19.5 ஓவர் முடிவில் 154 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்தது. இந்த இலக்கை சன்ரைசர்ஸ் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே வென்றது. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு யாரவது சிஎஸ்கேக்கு சூனியம் வைத்து விட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஒரு அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்றால் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளில் அதிக அளவு வெற்றி பெற வேண்டும். சி எஸ் கே அணியின் கடந்த கால வெற்றிக்கு சேப்பாக்கம் மைதானம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. சேப்பாக்கம் மைதானம் சிஎஸ்கே வின் கோட்டையாக இருந்தது.

உதாரணத்திற்கு ஆர் சி பி அணி 18 ஆண்டுகளாக சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றியே பெறாமல் இருந்த நிலையில், தற்போது இந்த சீசனில் அந்த சாதனை முடிவுக்கு வந்தது. இதேபோன்று 2010 ஆம் ஆண்டு முதல் டெல்லி அணி சென்னையில் சிஎஸ்கேவை வீழ்த்தாத நிலையில் அதுவும் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. இதையெல்லாம் விட கொடுமையானது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஐந்திலுமே சேப்பாக்கத்தில் தோல்வியை தழுவியது.

ஆனால் தற்போது இந்த சீசனில் சிஎஸ்கே அணி எதிராக முதல் வெற்றியை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இதன் மூலம் சென்னை அணி எவ்வளவு மோசமாக சொந்த மண்ணில் விளையாடுகிறது என்பதை நாம் தெளிவாக பார்க்க முடிகிறது. இதற்கு காரணம் ஆடுகளம் மோசமாக இருப்பது தான்.

இது குறித்து கிரிக்கெட் வல்லுனர் நானி ஏற்கனவே பலமுறை வலியுறுத்தி விட்டார். சென்னை அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருக்கிறது. பலவீனமான பேட்டிங் இருக்கும்போது ஆடுகளம் கொஞ்சம் பேட்டிங்கிற்கு சாதகமாக தயார் செய்ய வேண்டும். இந்த வீரர்களை வைத்துக்கொண்டு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் அமைத்தால் இந்த அணி தாங்காது என்று அவர் கூறியிருந்தார்.

சென்னை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு முற்றிலும் சாதகமாக இல்லை என்றாலும் மிகவும் தோய்வாக மாறிவிடுகிறது. முதல் ஆறு ஓவருக்கு மேல் பந்து பேட்டிற்கு வரவே இல்லை. இந்த வீரர்களை வைத்துக்கொண்டு இந்த ஆடுகளத்தில் சிஎஸ்கே அணியால் வெற்றி பெற முடியாது. இதனால் தான் நடப்பு சீசனில் 5 போட்டிகளில் சிஎஸ்கே அணி சென்னை சேப்பாக்கத்தில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்திருக்கிறது.

இன்னும் இரண்டு போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெறும். இந்த இரண்டு போட்டிகள் ஆவது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்பட வேண்டும். இல்லை என்றால் அந்த இரண்டு போட்டிகளிலுமே சிஎஸ்கே அணி தோல்வியை தழுவ வாய்ப்பு இருக்கிறது. சிஎஸ்கே அணி வரும் 30-ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது.

இதேபோன்று மே 12ஆம் தேதி ராஜஸ்தான் அணிக்கு எதிராக சென்னையில் தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்றால் ஆடுகளம் ஒரு அளவுக்காவது பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்க வேண்டும். இந்த நிலையில் மே மூன்றாம் தேதி ஆர் சி பிக்கு எதிராகவும், மே 7ஆம் தேதி கொல்கத்தாவுக்கு எதிராகவும், மே 18ஆம் தேதி குஜராத்துக்கு எதிராகவும் மூன்று போட்டிகளில் சிஎஸ்கே அணி வெளி மைதானங்களில் விளையாடுகிறது.இந்த மூன்று மைதானமே ரன் குவிப்புக்கு சாதகமானது என்பதால் அதில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Friday, April 25, 2025, 21:41 [IST]
Other articles published on Apr 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+