Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: 83 ரன்கள் வித்தியாசத்தில் GT-யை வீழ்த்திய சிஎஸ்கே.. நூழிலையில் 9வது இடம் போனது

அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய நான்காவது வெற்றியை அபாரமாக பெற்றிருக்கிறது. கடைசி ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த குஜராத் அணியை சிஎஸ்கே அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது.

அகமதாபாத் நகரில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் தேர்வு செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.

CSK vs GT

17 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர் என 200 ஸ்ட்ரைக் ரேட் உடன் 34 ரன்கள் எடுத்தார். இதேபோன்று மாற்றுவீரராக அணிக்குள் வந்த உர்வில் பட்டியல் 19 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்சர் அடங்கும். இதேபோன்று சிவம் துபே 2 சிக்சர்களுடன் 8 பந்தில் 17 ரன்கள் எடுத்தார். இதேபோன்று அனுபவ வீரரான கான்வே 35 பந்தில் 52 ரன்கள் எடுத்தார்.

இந்த சூழலில் நடுவரிசையில் விளையாடிய மற்றொரு மாற்று வீரரான தென்னாப்பிரிக்காவின் பிரவீஸ் அதிரடி காட்டி சிஎஸ்கே ரசிகர்களுக்கு ரன்களை கொடுத்தார். 19 பந்துகளில் அரை சதம் விளாசிய 23 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இதில் 5 சிக்சர், நான்கு பவுண்டரி அடங்கும்.

இறுதியில் ஜடேஜா 21 ரன்கள் எடுக்க சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது. இது நடப்பு சீசனில் சிஎஸ்கே அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதனை அடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கில் 13 ரன்களிலும், ஜாஸ் பட்லர் ஐந்து ரன்களிலும் வெளியேறினர்.

இதனால் குஜராத் அணி 32 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் தமிழக வீரரான சாய் சுதர்சன் மட்டும் தனியாளாக போராடி 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இதில் ஆறு பவுண்டரிகள் அடங்கும். தமிழக வர் சாருக்கான் 15 பந்துகளில் 19 ரன்கள் எடுக்க ராகுல் திவாத்தியார் 14 ரன்களும், ரசித் கான் 12 ரன்களும் எடுத்தனர். இறுதியில் அர்சத கான் 20 ரன்கள் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இதனால் குஜராத் அணி 18.3 ஓவர்களில் 141 ரன்களில் ஆல் அவுட் ஆனது. சிஎஸ்கே பந்துவீச்சு தரப்பில் அன்சூர் காம்போஜ் , நூர் அகமது தலா மூன்று விக்கெடுகளை கைப்பற்றி அசத்தினர். இதன் மூலம் 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி நடப்பு சீசனில் எட்டாவது இடத்தை நிறைவு செய்து இருக்கிறது. ராஜஸ்தான் அணியின் ரன் ரேட் மைனஸ் 0.54 என்ற அளவில் இருக்க, சிஎஸ்கே நூழிலையில் மைனஸ் 0.70 ரன் ரேட் உடன் நிறைவு செய்து ஒன்பதாவது இடத்தை தவறவிட்டது.

Story first published: Sunday, May 25, 2025, 19:27 [IST]
Other articles published on May 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+