சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மற்ற அணிகள் எல்லாம் 200 ரன்கள் அடித்து பட்டையை கிளப்பி வரும் நிலையில், சிஎஸ்கே அணி மட்டும் மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. மற்ற அணிகள் எல்லாம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ரன்களை அடிக்கும் நிலையில், சிஎஸ்கே அணி மட்டும் டவுன் பஸ் வேகத்தில் ரன்களை சேர்க்கிறது.
இதனால் சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் இருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணி தங்களுடைய பேட்டிங்கை முற்றிலும் மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது அதற்கான நகர்த்தலை தோனி செய்திருக்கிறார்.

அதன்படி சிஎஸ்கே அணியில் இரண்டு வீரர்கள் காயம் அடைந்ததால் தற்போது புதிய வீரர்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். ருதுராஜ்க்கு பதில் 17 வயது மும்பை வீரரான ஆயுஷ் மாத்ரேவையும் சிஎஸ்கே வீரர் குர்பன்னீத் சிங் பதிலாக தென்னாபிரிக்க வீரர் பிரவிஸ் செய்யும் சிஎஸ்கே அணி சேர்த்து இருக்கிறது.
அதிரடியாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் என்பதால் அவர் மட்டும் தன்னுடைய முழு திறமையை வெளிப்படுத்தினால் சிஎஸ்கே அணியின் பேட்டிங்கை தலைக்கீழ் மாறும். சிஎஸ்கே அணி தங்களுடைய தொடக்க வீரர்களாக ஷேக் ரசித்தையும் ஆயுஷ் மாத்ரே சேர்த்தால் ஓப்பனிங் புத்தம் புதிய ஒரு ஓபனிங் ஆக மாறும். ஆனால் சிஎஸ்கே அணி ரச்சினுக்கு தான் முன்னுரிமை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் நடுவரிசையில் பேட்டிங் மிகவும் மோசமாக இருக்கிறது. விஜய் ஷங்கரும் பெரிய அளவு ஷாட்களை ஆடுவதில்லை. ராகுல் திருப்பாதியும் மோசமாக விளையாடி வருகிறார். இதனால் அவரை நீக்கிவிட்டு இந்த இடத்தில் பிரவீசை சிஎஸ்கே அணி சேர்க்கப் போகிறது.
இதன் மூலம் சின்னத்தல ரெய்னாவின் இடத்தை பிரவீஸ் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.பிரவீஸ் வலுவான இன்னிங்ஸ் ஆடக்கூடியவர் தான். எனினும் அவருடைய முழு திறமை இதுவரை வெளிப்படவில்லை. இதேபோன்று அதிரடியாக விளையாடக் கூடிய வான்ஸ் பேடியையும் சிஎஸ்கே அணி நடுவரிசையில் சேர்க்கப் போகிறது. இந்த மாற்றங்கள் நிகழ்ந்தால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பலமானதாக மாறிவிடும். இதன் மூலம் சிஎஸ்கே அணியும் எளிதாக 200 ரன்னுக்கு மேல் அடிக்கக்கூடிய அணியாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது .