Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: அதிரடி வீரரை நான் ஸ்ட்ரைக்கர் திசையில் ரன் அவுட்..தோனி அபாரம்! ஃபார்ம்க்கு திரும்பிய பண்ட்

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை தழுவி இருப்பதால் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் லக்னோ அணியை அதன் சொந்த மண்ணில் இன்று எதிர்கொண்டது. டாஸ் வென்ற கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே அணியில் அனைவரும் எதிர்பார்த்த மாற்றமான இளம் வீரர் ஷேக் ரசீதை சிஎஸ்கே சேர்த்தது. அதேபோன்று அஸ்வின் மாற்றப்பட்டு அவருக்கு பதில் ஜெமி ஓவர்டன் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பில்டிங்கும் இன்றைய ஆட்டத்தில் அபாரமாக இருந்தது.

CSK vs LSG

லக்னோ அணியின் தொடக்க வீரர் ஏய்டன் மார்க்கர்ம் அடித்த ஷாட்டை ராகுல் திருப்பாதி அபாரமாக ஓடி சென்று கேட்ச் பிடித்தார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைப் போன்று நிக்கோலஸ் பூரான் பவர் பிளேவில் விளையாடியதால் அவர் சுழற் பந்துவீச்சை நொறுக்கி எடுத்து விடுவார் என்பதை அறிந்து கொண்ட தோனி அவர் இருக்கும் வரை சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தவே இல்லை.

இதனை அடுத்து பவர் பிளே முழுவதும் வேகபந்து வீச்சாளர்கள் வைத்து தோனி ஓவர்களை நகர்த்தினார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. நிக்கோலோஸ் பூரான் 9 பந்துகளில் எட்டு ரன்கள் எடுத்திருந்தபோது அன்சூல் கம்போஜ் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். மிட்செல் மார்ஸ் மற்றும் பண்ட் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். மார்ஸ் 30 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

பதோனி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவர் ஜடேஜா பந்துவீச்சில் தோனியிடம் ஸ்டெம்பிங் ஆனார். ஒரு கட்டத்தில் லக்னோ அணி 140 ரன்கள் தான் எடுக்கும் என ரசிகர்கள் எதிர் பார்த்த நிலையில், பண்ட் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான்கு சிக்ஸர், 4 பவுண்டரி என 49 பந்துகளில் அவர் 63 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தோனியிடம் கேட்ச் ஆகி ஆட்டம் இழந்தார்.

இதேபோன்று அப்துல் சமத் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி வந்தார். இரண்டு சிக்சர் அடித்த அவர் 11 பந்துகளில் 20 ரன்களில் ஆட்டம் இழந்தார். பதிரானா வீசிய ஓயிடு பந்தை தோனி பிடித்த போது அப்துல் சமத் திடீரென்று ரன் ஓடினார். அப்போது தோனி விக்கெட் கீப்பர் பொசிஷனில் நின்று கொண்டு நான் ஸ்ட்ரைக் திசை நோக்கி பந்தை எரிந்து ஸ்டெம்பை அடித்தார்.
இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அப்துல் சமத் நடுவரின் முடிவை எதிர்பார்க்காமலேயே பெவிலியன் நோக்கி சென்றார். இறுதியில் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. ஜடேஜா,
பதிரானா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Story first published: Monday, April 14, 2025, 21:41 [IST]
Other articles published on Apr 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+