Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: தோல்விக்கான பழியை நான் ஏற்று கொள்கிறேன்.. யாக்கர் வீசாமல் சொதப்பி விட்டோம்.. கேப்டன் தோனி

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவி இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த ஆர் சி பி அணி கடைசி இரண்டு ஓவர்களில் 50 ரன்கள் அடித்து 213 ரன்கள் குவித்தது.இதனை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் ஆர் சி பி அணி தோல்வியை தழுவியது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணி கேப்டன் தோனி, நான் இறுதிக் கட்டத்தில் இரண்டு பெரிய ஷாட்டுகளை ஆடி மற்ற வீரர்கள் மீது இருந்த நெருக்கடியை குறைத்து இருக்க வேண்டும். நான் செய்ததுதான் தவறு. எனவே அதற்கான பழியை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆர் சி பி அணியில் செபர்ட் கடைசி கட்டத்தில் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

MS Dhoni

நாங்கள் எந்த மாதிரி பந்து வீசினாலும் செபர்ட், அதை சிக்ஸருக்கு அடித்து அபாரமாக செயல்பட்டார். எங்கள் அணியின் பௌலர்கள் அதிக அளவு யாக்கர்கள் வீச வேண்டும். பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடும் போது யாக்கர் தான் சிறந்த ஆப்ஷன். ஒரு வேலை உங்களால் யாக்கர் சிறந்த முறையில் வீச முடியவில்லை என்றால் low fulltoss பந்தை வீசவேண்டும்.

அதுதான் இரண்டாவது சிறந்த ஆப்ஷன். பதிரானா போன்ற வீரர்கள் பந்து வீச்சில் வேகம் இருக்கின்றது. அவரால் பவுன்சரும் வீச முடியும். ஒருவேளை அவர் யாக்கர் மிஸ் செய்தால் பேட்டர்கள் அதனை சுலபமாக சிக்ஸருக்கு அடித்து விடுகிறார்கள். எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களும் பேடுக்கு வரும் பந்தை அடிக்கும் சாட்டை அதிக அளவு பயிற்சி செய்ய வேண்டும்.

எங்கள் அணியின் பெரும்பாலான பேட்டர்கள் அந்த சாட்டை ஆடுவதில் தயக்கம் காட்டி வருகிறார்கள். ஜடேஜா அபாரமாக விளையாடினார். ஆனால் அவர் அனைத்தையும் பெரிய சாட் ஆட முயற்சி செய்கின்றார். இந்த தொடரில் நாங்கள் பேட்டிங்கில் தான் பின்தங்கி இருந்தோம். ஆனால் இன்று பேட்டர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டார்கள். பந்துவீச்சில் இன்று சொதப்பிவிட்டோம் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார்.

Story first published: Saturday, May 3, 2025, 23:50 [IST]
Other articles published on May 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+