Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs MI: 3வது வீரராக பேட்டிங் செய்தது ஏன்? வெற்றி இன்னும் சிறப்பானதாக அமைந்திருக்கலாம்.. ருதுராஜ்

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்த நிலையில் சிஎஸ்கே அணி 19 புள்ளி ஒரு ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் அபாரமாக விளையாடி 26 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். ரச்சின் ரவீந்தரா 45 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் ருதுராஜ் பேட்டிங் வரிசையில் மூன்றாவது வீரராக களமிறங்கினார்.

Ruturaj

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நான் ஆட்டமிழந்த பிறகு கொஞ்சம் டென்ஷன் ஆக இருந்தது உண்மைதான். ஏனென்றால் சில போட்டிகள் இப்படி குளோசாக போய் முடியும். எனினும்இந்த போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் இந்த வெற்றி இன்னும் சிறப்பான முறையில் அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆனால் போட்டி இப்படித்தான் செல்கிறது. நான் பேட்டிங் வரிசையில் மூன்றாவது வீரராக இறங்குவதற்கு காரணம் அணியின் நன்மைக்காக தான். நான் மூன்றாவது வீரராக களம் இறங்கினால் அது அணியின் பேலன்ஸை கூட்டுகிறது. அணிக்காக நான் இந்த மாற்றம் செய்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது.

ராகுல் திருப்பாதி அதிரடியாக ஆடக்கூடியவர். இதனால் அவர் தொடக்க வீரராக களமிறங்குவது சிறப்பான முடிவாக இருக்கும் என நினைத்தோம். இன்றைய ஆட்டத்தில் எங்களின் சுழற் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் ஏலத்தின் போது, சுழற் பந்துவீச்சாளர்களை அதிக அளவு தேர்வு செய்தோம்.

இந்த சுழற் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சேப்பாக்கம் மைதானத்தில் பந்து வீசுகிறார்கள் என்று நினைக்கும் போது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கலீல் அகமது அனுபவம் வாய்ந்த வீரராக விளங்கினார். இதைப் போன்று நூர் அகமது, சிஎஸ்கே அணிக்கு ஒரு எக்ஸ் பெக்டராக இருக்கின்றார்.

இதேபோன்று அஸ்வினும் அணியில் இருக்கின்றார். தோனி கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு மிகவும் இளமையாக தோன்றுகிறார். அவருடைய உடல் தகுதியும் கடந்த ஆண்டு விட இம்முறை அதிகரித்து இருக்கிறது என்று ருதுராஜ் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, March 23, 2025, 23:48 [IST]
Other articles published on Mar 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+