Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- CSK அணியில் மாற்றமில்லை.. ஓப்பனிங் வர மாட்டேன்.. ருதுராஜ் உறுதி.. பாதகமாக விழுந்த டாஸ்

சந்திகார்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு பாதகமாக டாஸ் விழுந்திருக்கிறது. இதுவரை நான்கு போட்டியில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த சூழலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் அணி இன்று சந்திக்காரில் சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இது குறித்து பேசிய அவர், முதலில் நாங்கள் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். எங்கள் அணியின் பேட்டிங் பலம் வாய்ந்ததாக இருக்கின்றது.

CSK vs PBKS

அதை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம். கடைசி போட்டியில் பெரிய அளவு பனிப்பொழிவு இல்லை. ஆனால் பணி பெய்யுமா பெய்யாதா என்பதெல்லாம் நமது கையில் இல்லை. எனவே எங்களுடைய பலத்தை நம்பி நாங்கள் விளையாடுகின்றோம்.

எங்கள் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எங்கள் அணியில் நல்ல சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கின்றார்கள். இருப்பினும் அவர்களை எந்த சூழலில் பயன்படுத்த வேண்டும் என்பதை முக்கியம். கடந்த போட்டியில் பந்து பெரிய அளவு திரும்பவில்லை. அதே சமயம் ராஜஸ்தான் அணி வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். அவர்கள் அபாரமாக விளையாடினார்கள்.

இன்று சிஎஸ்கேவுக்கு எதிராக நாங்கள் பல திட்டங்களை தீட்டி இருக்கின்றோம். அதனை வெற்றிகரமாக செயல்படுத்துவோம் என்று நினைக்கிறேன் என்று ஸ்ரேயாஸ் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ், நாங்களும் முதலில் பேட்டிங் செய்யத்தான் முடிவெடுத்திருந்தோம். ஆடுகளம் காய்ந்த நிலையில் இருக்கின்றது.

இது எங்களுக்கு புதிய மைதானம் ஆகும். களத்திற்கு ஏற்ப எங்களை நாங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். எங்களது அணியின் பவுலர்கள் நன்றாக தான் செயல்படுகிறார்கள். ஆனால் ஒரு இன்னிங்ஸில் இரண்டு முறை 15 ரன்களுக்கு மேல் கொடுத்து விடுகிறார்கள். அதை மட்டும் நாங்கள் மாற்றிக்கொள்ள விரும்புகின்றோம். எங்கள் அணியின் எந்த மாற்றமும் இல்லை. அணியின் முக்கியத்துவத்தை பொறுத்துதான் நான் மூன்றாவது வீரராக களம் இறங்கினேன்.

ஏலத்தின் போதே நான் மூன்றாவது வீரராக தான் விளையாட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இன்று எங்கள் அணியின் தொடக்க வீரர்கள் அபாரமாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். நாங்கள் பவர் பிளேவில் கொஞ்சம் பின்னடைவை சந்தித்து வருகின்றோம். அதில் முன்னேற்றம் செய்ய வேண்டும். களத்திற்கு சென்று இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும் என்று ருதுராஜ் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, April 8, 2025, 19:17 [IST]
Other articles published on Apr 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+