Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: ஏலத்தில் சிஎஸ்கே குறிவைத்த நிதிஷ் ரானா. வெறும் ரூ.1.7 கோடியால் கைவிட்டு போன சோகம்

கவுகாத்தி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கில் தடுமாறி வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.ஒரு காலத்தில் சிஎஸ்கே அணியில் களமிறங்கும் அனைத்து வீரர்களும் தனி ஆளாக நின்று போட்டியை வென்று கொடுப்பார்கள்.

ஆனால் தற்போது சிஎஸ்கே அணி வெறும் ஒரு இரண்டு வீரர்களின் நம்பியே இருக்கிறது. மும்பை மற்றும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிகளில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.

Nitish Rana

இந்த தருணத்தில் சிஎஸ்கே அணி ராகுல் திருப்பாதியை மூன்று கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும், விஜய் சங்கரை ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்க்கும், தீபக் ஹூடாவை ஒரு கோடியை 70 லட்சம் ரூபாய்க்கும் வாங்கியது. இந்த மூன்று வீரர்களுமே தற்போது சரியாக செயல்படாதது தான் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய சோகமாக மாறி இருக்கிறது.

இந்த தருணத்தில் இன்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டாலும் ராஜஸ்தான் வீரர் நிதிஷ்ரானா 36 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார். இதில் 10 பவுண்டரிகளும்,5 சிக்சர்களும் அடங்கும். நிதிஷ் ரானாவின் ஸ்ட்ரைக் ரேட் 225 என்று அளவில் இருந்தது.

இந்த சூழலில் நிதிஷ் ரானா ஐபிஎல் ஏலத்தில் வந்தபோது சிஎஸ்கே தான் அவரை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்தது. நிதிஷ் ரானாவுக்காக 2 கோடியே 60 லட்சம் ரூபாய் வரை சிஎஸ்கே கேட்டது. ஆனால் அதன் மேல் ரானாவுக்கு செலவு செய்ய சிஎஸ்கே தயங்கி பின்வாங்கியது. இதன் அடுத்த ஆர்சிபியும் ராஜஸ்தான் அணியும் நிதிஷ் ராணாவுக்காக போட்டி போட, ராஜஸ்தான் அணி 4 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து தற்போது அவரை வாங்கி இருக்கிறது.

தமக்கு கிடைத்த பணத்திற்கு ஏற்ற வீரர் தான் என்பதை இன்று சிஎஸ்கேவுக்கு எதிராக வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார் நிதிஷ் ரானா. இந்த தருணத்தில் சிஎஸ்கே அணி நிதிஷ் ரானாவை கூடுதல் தொகை கொடுத்து எடுத்திருந்தால், நமது அணியின் பேட்டிங் வரிசை மேலும் பலமாகி இருக்கும். நடுவரிசையும் சிஎஸ்கே தடுமாறி வரும் நிலையில் நிதிஷ் ரானா நம்பர் மூன்றாவது வீரராக களம் இறங்கி ரெய்னாவின் இடத்தை பூர்த்தி செய்து இருப்பார். இதனால் ஏலத்தில் சிஎஸ்கே அணி நிதிஷ் ராணா மிஸ் செய்துவிட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Story first published: Sunday, March 30, 2025, 23:04 [IST]
Other articles published on Mar 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+