Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- எங்க இருந்த ராசா நீ? ஒரே ஓவரில் 3 சிக்சர்.. தெறிக்கவிட்ட பிரவீஸ்..ஆட்டத்தை மாற்றிய கேட்ச்

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு போதாத காலமாக அமைந்திருக்கிறது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான முக்கிய லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது. இதனால் சிஎஸ்கே அணியில் பல புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் தென்னாப்பிரிக்காவில் 21 வயது வீரரான டெவால்ட் பிரவீஸ் சிஎஸ்கே அணிக்காக தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்கினார். ஆடுகளம் தோய்வாக இருந்த நிலையில் பிரவீஸ் என்ன செய்து விடப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

Dewald Brevis

ஆனால் முதலில் கொஞ்சம் பொறுமையாக விளையாடிய பிரவீஸ் பின்னர் தம்மை ஏன் ரசிகர்கள் குட்டி டிவில்லியர்ஸ் என்று அழைக்கிறார்கள் என்பதை நிரூபித்தார். ஆடுகளம் மிகவும் தோய்வாக இருந்த நிலையில், அதனை பயன்படுத்திக்கொண்டு சுழற் பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர். ஆனால் அவர்களையே குழப்பம் விதமாக ஸ்டெம்பை காட்டிக் கொண்டு, பின்னர் ஸ்டெம்பை மறைத்து விளையாடினார்.

மேலும் ஸ்டம்பை குறி வைத்து வீசப்படும் பந்துக்கு கொஞ்சம் நகர்ந்து வந்து இடைவெளியை தானாகவே உருவாக்கிக் கொண்டு பவுண்டரி அடிக்க முயற்சித்தார். இந்த நிலையில் ஆட்டத்தில் 12வது ஓவரில் தான் பிரவீஸ், தன்னுடைய ருத்ர தாண்டவத்தை ஆடினார். கமெண்டு மெண்டீஸ் வீசிய ஓவரில் மூன்று சிக்ஸர்களை விளாசி சிஎஸ்கே அணி அந்த ஓவரில் 20 ரன்கள் விளாசியது. இதனால் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. 11.4 ஓவரில் எல்லாம் சிஎஸ்கே அணி 100 ரன்களை கடந்ததால் ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால் ஆட்டத்தின் 13 வது ஓவரில் ஹர்சல் வீசிய பந்தை அடித்த பிரவீஸ் எதிர்பார்த்தார். ஆனால் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த கமிண்டு மெண்டிஸ் ஓடி வந்து பாய்ந்து கேட்ச் பிடித்து ஆட்டத்தையே தலைகீழ் மாற்றினார். இதன் மூலம் பிரவீஸ் 25 பந்துகளில் 42 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதில் நான்கு சிக்ஸர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும்.

Story first published: Friday, April 25, 2025, 21:29 [IST]
Other articles published on Apr 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+