Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- RCB ரசிகர்கள் அட்டூழியம்! தனி ஆளாக எதிர்த்த CSK பெண் சிங்கம்..ஓடி வந்து காப்பாற்றிய போலீஸ்

பெங்களூர்: சர்வதேச கிரிக்கெட்டில் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் எவ்வளவு மோசமாக நடந்து கொள்வார்களோ அதை போல் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி ரசிகர்கள் தரம் தாழ்ந்து நடந்து கொள்வதில் வல்லவர்கள். சிஎஸ்கேவும், ஆர்சிபி அணியும் பலமுறை மோதி இருக்கிறார்கள்.

இதில் சிஎஸ்கே அணி அதிக முறை வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதுவரை நடைபெற்ற 35 போட்டிகளில் ஆர் சி பி வெறும் 13 போட்டிகளில் தான் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் சிஎஸ்கே 21 ஆட்டங்களில் வென்றுள்ளது.

CSK Fan girl

இன்னும் சொல்லப்போனால் ஒரே சீசனில் தொடர்ந்து இரண்டு முறை சிஎஸ்கே அணி ஆர்சிபியை வீழ்த்தியது இதுதான் முதல் முறை. மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆர்சிபி அணி வெற்றி பெற்றதும் இந்த ஆண்டுதான். மேலும் சிஎஸ்கே அணி ஐந்து முறை கோப்பையை வென்றிருக்கிறது. ஆனால் ஆர் சி பி அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றது கிடையாது.

இப்படி அனைத்து விஷயத்திலும் சிஎஸ்கே அணி தான் கெத்தாக இருக்கிறது. ஆனால் ஆர் சி பி அணி என்றாவது ஒருநாள் சிஎஸ்கேவை வீழ்த்திவிட்டால் அவர்கள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்து கொண்டாடுவார்கள். சிஎஸ்கேவை கிண்டல் செய்து பாட்டு போடுவது, சிஎஸ்கே ரசிகர்களை கிண்டல் செய்வது என பல அடாவடித்தனத்தில் ஈடுபடுவார்கள்.

குறிப்பாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பல சிஎஸ்கே ரசிகர்கள் போட்டியை கண்டு களிப்பார்கள். அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது. இதை அடுத்து ஆர்சிபி ரசிகர்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூர் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே சிஎஸ்கே ரசிகை ஒருவர் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை சூழ்ந்த rcb ரசிகர்கள் அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். 10 பேருக்கு மேற்பட்ட கும்பல் அந்த சிஎஸ்கே ரசிகையை சூழ்ந்து கொண்டது. ஆனால் கொஞ்சம் கூட அந்தப் பெண் பயப்படாமல் தனது கைவிரலை ஐந்தை காட்டி எங்கள் சிஎஸ்கே விடம் ஐந்து கோப்பை இருக்கிறது. ஆர்சிபி இடம் எவ்வளவு கோப்பை இருக்கிறது என்று கேள்வி கேட்டார்.

இதற்கு பதில் சொல்ல முடியாமல் ஆர் சி பி ரசிகர்கள் வாய் மூடி நின்று கொண்டிருந்தனர். இந்தக் காட்சியைப் பார்த்த பெங்களூர் போக்குவரத்து போலீசார் உடனே அங்கு விரைந்து rcb ரசிகர்களை தாக்கி அப்புறப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Story first published: Tuesday, May 6, 2025, 22:28 [IST]
Other articles published on May 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+