Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- ஒரே ஒரு ரியாக்சன் தான்.. ஒரு லட்சம் ஃபாலோவர்ஸ்.. ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய CSK ரசிகை

கவுகாத்தி: ஐபிஎல் போட்டிகள் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்லாமல் கிரிக்கெட் போட்டியை பார்க்க மைதானத்திற்கு வரும் ரசிகர்களின் வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றி இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளை பார்க்க வரும் ரசிகர்களின் கியூட் ரியாக்சன்களை கேமரா மேன் பிடித்து விடுவார்கள்.

இது க்யூட்டாக இருந்தால் அது அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடும். ஒரே நாளில் சமூக வலைத்தளத்தில் சூப்பர் ஸ்டார் ஆக மாறிவிடுவார்கள். அதுவே நமது ரியாக்சன் மோசமாக அமைந்தால், சமூக வலைத்தளத்தில் நாம் தான் புதிய மீம் டெம்ப்ளேட்டாக மாறிவிடுவோம்.

CSK Fan girl

அந்த வகையில் கவுஹாத்தியில் அண்மையில் சிஎஸ்கே அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பல பரிட்சை நடத்தியது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 6
ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கடைசி ஓவரில் தோனி சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து சிம்ரன் ஹிட்மயரின் அபாரமான கேட்ச் ஆல் ஆட்டம் இழந்தார்.

அப்போது சிஎஸ்கே ரசிகை ஒருவர் கையை நீட்டிக்கொண்டு கோபமாக ஒரு க்யூட் ரியாக்ஷன் கொடுத்தார். இது கேமரா மேனின் கண்ணில் பட்டது. இந்த காட்சியை ஒளிபரப்பு செய்தவுடன், அந்தப் பெண் ஓவர் நைட்டில் ஒபாமாவாக மாறிவிட்டார். அந்தப் பெண் க்யூட்டாக இருந்ததால் அவர் யார் என ரசிகர்கள் தேட தொடங்கிவிட்டனர். இதனை அடுத்து அந்தப் பெண் பெயர் ஆரியப்பிரியா பூயான் என்பதும், அவர் கௌஹாத்தியை சேர்ந்த 19 வயதான மாணவி என்பதும் தெரியவந்தது.

இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஆயிரம் பாலோவர்ஸ் தான் இருந்தனர். ஆனால் தற்போது இந்த காட்சிகள் வந்தவுடன் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் அந்த பெண்ணை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆரியப்பிரியா, "எனது instagram பக்கத்தில் வெறும் ஆயிரம் பேர் தான் என்னை பின் தொடர்ந்தார்கள்.

நான் சமூக வலைத்தளத்தில் பெரியதாக எந்த புகைப்படத்தையும் போட்டு பதிவிட மாட்டேன். நான் எங்கேயும் பயணம் செய்தால் மட்டுமே புகைப்படத்தை பதிவிடுவேன். சிஎஸ்கே போட்டிக்காக நான் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தேன். சிஎஸ்கே அந்த போட்டியில் வெற்றி பெறும் என நினைத்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக நாங்கள் தோற்று விட்டோம்.

நான் டிவியில் வந்தது எனக்கு தெரியாது. என்னுடைய நண்பர்கள்தான் என்னை டிவியில் பார்த்ததாக முதலில் மெசேஜ் அனுப்பினார்கள். ஆனால் அது இவ்வளவு பெரிய வைரலாக மாறும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. நான் தோனி அவுட் ஆகிவிட்டாரே என்ற கடுப்பில் அந்த ரியாக்ஷனை கொடுத்தேன். அது இவ்வளவு பிரபலமாகும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை" என்று ஆரியப்பிரியா தெரிவித்துள்ளார். மேலும் சிஎஸ்கே அணி இம்முறை ஆறாவது கோப்பையை கைப்பற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, April 2, 2025, 18:57 [IST]
Other articles published on Apr 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+