For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025: ஆர்சிபியை பார்த்து கற்று கொள்ளனுமா? வெட்கமா இல்லையா பிளமிங்.. சிஎஸ்கே-வை விட்டு போங்க

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இனி சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால், எஞ்சி இருக்கும் ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். மேலும் மற்ற அணிகளின் தயவும் சிஎஸ்கே அணிக்கு வேண்டும்.

இந்த சூழலில் கடந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி இதேபோல் தான் கடைசி இடத்தில் இருந்தது. ஆனால் தொடர்ந்து ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று தகுதி பெற்றது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணியின் பயிற்சியாளரான பிளமிங், ஆர்சிபி அணி இடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

CSK Fleming

ஆர்சிபி தொடர்ந்து ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு சென்றார்கள். அவர்களைப் போல் விளையாட வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதுதான் சிஎஸ்கே ரசிகர்களை எரிச்சலின் உச்சத்திற்கு கொண்டு இருக்கிறது. ஏனென்றால் சிஎஸ்கே அணிக்கும் ஆர்சிபி அணிக்கும் கொஞ்சம் கூட பொருத்தமே கிடையாது.

இரு அணி ரசிகர்களும் ஏதோ இந்தியா பாகிஸ்தான் நாட்டினர் போல் சமூக வலைத்தளத்தில் சண்டை போட்டுக் கொள்வார்கள். மேலும் கடந்த சீசனில் சிஎஸ்கே அணி ஆர்சிபி இடம் தோல்வியை தழுவி தான் தொடரை விட்டு வெளியேறியது. அப்போது சிஎஸ்கே ரசிகர்களை வெறுப்பேற்றும் விதமாக ஆர்சிபி ரசிகர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டனர்.

இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு ஆர்சிபி அணியை சிஎஸ்கே பழிவாங்க வேண்டும் என்று தமிழக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், ஆர்சிபி அணி 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்தது. சரி பெங்களூருக்கு சென்றாவது சிஎஸ்கே பழித் தீர்க்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆனால் தற்போது பிளமிங் பேசியிருக்கும் பேச்சு சிஎஸ்கே வின் தரத்தை குறைத்து விட்டதாகவும், இதனால் ஆர்சிபி ரசிகர்கள் சிஎஸ்கேவை ஏளனம் செய்வதாகவும் புகார் அளிந்துள்ளது. சிஎஸ்கே என்றால் ஒரு கெத்து இருந்த நிலையில் தற்போது அதை குழி தோண்டி பிளமிங் புதைத்து விட்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். போயும் போயும் ஆர்ச பி அணியுடன் ஒப்பிட்டு சிஎஸ்கே பாடம் கற்க வேண்டும் என்று கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் ஆர்சிபி தான் சிஎஸ்கேவை பார்த்து விளையாட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். தற்போது நிலைமை தலைகீழ் மாறிவிட்டதால் ஃப்ளமிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து உடனடியாக செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

Story first published: Friday, April 25, 2025, 11:16 [IST]
Other articles published on Apr 25, 2025
English summary
IPL 2025- CSK Fans slams Head coach Fleming for RCB comment
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+