Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- Scam செய்கிறதா சிஎஸ்கே? ஆன் லைனில் டிக்கெட்டே இல்லை.. லட்சம் பேர் ஆன்லைனில் காத்திருப்பு

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை வரும் 23ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த டிக்கெட் விற்பனை ஆனது புதன்கிழமை மார்ச் 19 காலை 10 :15 மணிக்கு தொடங்கியது. டிஸ்ட்ரிக்ட் ஆப் மற்றும் இணையதளம் மூலமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இணையதளம் மூலமும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது.

CSK Ticket bookings

இதனை அடுத்து காலை முதல் டிக்கெட்டுகளை பெறுவதற்காக சிஎஸ்கே அணி ரசிகர்கள் மொபைல் லேப்டாப் என அனைத்து சாதனங்களையும் வைத்து காத்துக் கொண்டிருந்தனர்.டிக்கெட் விலை 1700 ரூபாய் ,2500 ரூபாய்,ரூ. 3500,ரூ. 4000 ரூபாய்,ரூ.7500 என்ற அளவு டிக்கெட் விற்பனை இருந்தது. இதில் ஏதேனும் ஒரு டிக்கெட்டையாவது பெற்றுவிடலாம் என சிஎஸ்கே ரசிகர்கள் போட்டி போட்டனர்.

ஆனால் சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு ஏமாற்றுமே மிஞ்சியது. ஆனால் வழக்கம் போல் உங்களுக்கு முன்பு பெரிய வரிசை காத்திருப்பதாக அந்த புக்கிங் தளத்தில் காட்டப்பட்டிருந்தது. இதில் சுமார் லட்சம் ரசிகர்கள் வரை தங்களது டிக்கெட் காத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சில மணி நேரத்திலேயே மீண்டும் டிக்கெட் அனைத்தும் காலி ஆகிவிட்டதாக அறிவிப்பு வெளியானது.

இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எந்த கிரிக்கெட் போட்டிகளை பார்க்க நேர்ந்தாலும், இதேபோல் ஒரு சூழல்தான் உருவாவதாகவும் 40 ஆயிரம் பேர் பார்க்கும் மைதானத்தில் பலருக்கும் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என்றும் ரசிகர்கள் சாடி இருக்கிறார்கள்.

மேலும் டிக்கெட்டுகள் குறைந்த அளவை விற்கப்படுவதாகவும் எஞ்சியிருக்கும் டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்கப்படுவதாகவும் சிஎஸ்கே ரசிகர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தோனி என்ற ஒரு மனிதனுக்காக தான் தாங்கள் இவ்வளவு ஆர்வத்துடன் டிக்கெட் வாங்கி இருப்பதாகவும் தோனி சென்றுவிட்டால் சிஎஸ்கே அணியின் மவுசு குறைந்து விடும் என்றும் அசகர்கள் சாடி இருக்கிறார்கள். சிஎஸ்கே அணி நிர்வாகம் டிக்கெட் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிஎஸ்கே அணி டிக்கெட் விற்பனையில் உள்ள பிரச்சினைகள் குறித்து உங்களுடைய கருத்தை கீழே கமெண்ட் செய்யுங்கள்.

Story first published: Wednesday, March 19, 2025, 14:30 [IST]
Other articles published on Mar 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+